
வீரேந்திர சேவாக்
இந்திய கிரிக்கெட் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக். 'வீரு' என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் வீரேந்திரா சேவாக்கின் அதிரடியை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்தியாவுக்காக பல்வேறு போட்டிகளில் மேட்ச் வின்னராக ஜொலித்த சேவாக், டெஸ்ட் மற்றும் 50 ஓவர் கிரிக்கெட்டில் 16,000க்கும் மேல் ரன்களை குவித்துள்ளார். கிட்டதட்ட 38 சதங்களை விளாசியுள்ளார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்சிகளிலும், பல்வேறு கல்லூரி நிகழ்ச்சிகளிலும் வீரேந்திர சேவாக் பங்கேற்று வருகிறார். சேவாக்கின் மனைவி ஆர்த்தி அஹ்லாவத். இருவரும் கடந்த 2004ம் ஆண்டு திருமனம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆர்யவீர், வேதாந்த் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், சேவாக்கும், அவரது மனைவியும் ஆர்த்தி அஹ்லாவத்தியும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விவாகரத்து பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் தகவல்கள் கூறுகின்றன.
மனைவி ஆர்த்தியை பிரியும் சேவாக்
அதாவது வீரேந்திர சேவாக்கும், அவரது மனைவியும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடர்வதை நிறுத்தியதாகத் தெரிகிறது. இருவரும் பல மாதங்களாக தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும், விவாகரத்து நடக்க வாய்ப்புள்ளதாகவும் குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தீபாவளி கொண்டாட்டத்தின் போது, சேவாக் தனது மகன்கள் மற்றும் தாயாருடன் இருந்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார்.
ஆனால் மனைவி ஆர்த்தி அவர்களுடன் இல்லை. இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்படுள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு சேவாக் பாலக்காட்டில் உள்ள விஸ்வ நாகயக்ஷி கோயிலுக்குச் சென்று அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்து கொண்டார். இந்த புகைப்படங்களிலும் ஆர்த்தி எங்கும் காணப்படாததால் இருவரும் பிரிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புகைப்படங்கள் வைரல்
ஆனால் சேவாக்கும், ஆர்த்தியும் பிரிந்து வாழ்வதாக இருவரும் எந்த தகவலையும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. ஆனாலும் கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக நெட்டிசன்கள் திரியை கொளுத்திப் போட்டு வருகின்றனர். சமூக ஊடகங்களில் சேவாக், ஆர்த்தி தொடர்பான புகைப்படங்கள் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.
டெல்லியை சேர்ந்த ஆர்த்தி அஹ்லாவத் 1980ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி பிறந்தார். ஆர்த்தி லேடி இர்வின் மேல்நிலைப் பள்ளி மற்றும் பாரதிய வித்யா பவனில் தனது பள்ளிக்கல்வியை பயின்றார். மேலும் டெல்லி பல்கலைக்கழகத்தின் மைத்ரேயி கல்லூரியில் கணினி அறிவியலில் டிப்ளோமா படிப்பை முடித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வட்டாரங்கள் விவகாரத்து தொடர்ந்து பெருகி வருகிறது.
சாஹல், ஹர்திக் பாண்ட்யா
சில வாரங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஸ்பின் பவுலர் யுஸ்வேந்திர சாஹலுக்கும், அவரது மனைவியும் பிரபல நடனக் கலைஞருமான தனஸ்ரீ வர்மாவும் விவகாரத்து செய்ய இருப்பதாக தீயாக செய்திகள் பரவின. இன்ஸ்டாகிராமில் இருவரும் ஒருவரையொருவர் அன்பாலோ செய்ததால் இருவரும் பிரிய உள்ளதாக கருத்துகள் பரவி வந்தன.
தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரும் பேச வேண்டாம் என ரசிகர்களுக்கு சாஹல் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்கு முன்னதாக இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா மனைவியை பிரிவதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
India vs England 2nd T20: சென்னை சேப்பாக்கம் பிட்ச் யாருக்கு சாதகம்? முழு ரிப்போர்ட் இதோ!