Chennai Chepauk Cricket Stadium
இந்திய அணி அபார வெற்றி
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஓடிஐ போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்பு விளையாடிய இந்திய அணி 13 ஓவர்களில் 3 விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
23 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய தமிழ்நாட்டை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். சிக்சர் மழை பொழிந்த அபிஷேக் ஷர்மா 34 பந்துகளில் 79 ரன்கள் விளாசி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இந்தியா இங்கிலாந்து இடையிலான 2வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் 3வது சர்வதேச டி20 போட்டி இதுவாகும்.
Chennai Chepauk Pitch Report
சென்னை சேப்பாக்கம் மைதானம்
கடந்த 2012ம் ஆண்டு இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டியும், கடந்த 2028ம் ஆண்டு இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய போட்டியும் என இரண்டு போட்டிகளே சேப்பாக்கம் மைதானத்தில் நடந்துள்ளன. அதே வேளையில் ஐபிஎல் போட்டிகள் அதிகம் நடந்துள்ளன. சேப்பாக்கம் மைதானத்தை ஸ்பின்னர்களின் சொர்க்கபுரி என்றே கூறலாம். ஏனெனில் இந்த பிட்ச்சில் பந்து நன்றாக சுழன்று திரும்பும்.
இங்கு விளையாடிய 2 போட்டிகளில் இந்தியா ஒன்றில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் அடைந்துள்ளது. அதாவது 2012ம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிராக 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியும், 2018ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக வெற்றியும் கண்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்த அணி ஒருமுறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
இந்திய அணியின் ஜெர்சியில் 'பாகிஸ்தான்' பெயர் அச்சிடப்படாதா? மெளனம் கலைத்த பிசிசிஐ; என்ன சொன்னது?
India vs England T20 Series
ஸ்பின்னர்களுக்கு சாதகம்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அதிகப்பட்சமாக இந்திய அணி 182 ரன்கள் எடுத்துள்ளது. குறைந்தபட்ச ஸ்கோராக நியூசிலாந்து 167 ரன்களை பதிவு செய்துள்ளது. ஆவரேஜ் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 174 ஆக உள்ளது. சேப்பாக்கத்தில் கடைசியாக நடந்த 10 ஐபிஎல் போட்டிகளை எடுத்துக் கொண்டால் முதலில் பேட்டிங் செய்த அணி 4 முறையும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி 6 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
ஏனெனில் சென்னையில் பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் 2வது பாதியில் பவுலிங் செய்வது மிகவும் கடினம். ஈரப்பதம் காரணமாக பந்து வழுக்கிக் கொண்டு செல்லும் என்பதால் ஸ்பின்னர்களுக்கு சரியான ஸ்கிரிப் கிடைக்காது. ஆகவே டாஸ் வெல்லும் அணி கண்ணைமூடிக்கொண்டு முதலில் பவுலிங் தேர்வு செய்யும் என்பதால் இந்த போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். பிட்ச்சில் பந்து நன்றாக நின்று திரும்பும் என்பதால் ஸ்பின்னர்களுக்கு கைகொடுக்கும்.
India vs England 2nd T20
ஸ்விங் கிடைக்க வாய்ப்பு
இதனால் இந்திய அணி முதல் டி20 போட்டியை போன்று அக்சர் படேல், ரவி பிஷ்னோய் மற்றும் வருண் சக்கரவர்த்தி என 3 ஸ்பின்னர்களுடன் விளையாடும். அதே வேளையில் தொடக்கத்தில் பாஸ்ட் பவுலர்களுக்கும் கொஞ்சம் ஸ்விங் கிடைக்க வாய்ப்புள்ளது.
இது அர்ஷ்தீப் சிங், ஜோப்ரா ஆர்ச்சருக்கு கைகொடுக்கலாம். 2வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 25ம் தேதி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்பின்னர்களின் சொர்க்கபுரி என்பதால் இந்த போட்டியில் இந்தியா எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முகமது ஷமிக்கு மீண்டும் சோதனை; டி20 தொடர் முழுவதும் விளையாடுவதில் சிக்கல்; முக்கிய அப்டேட்!