Rohit sharma vs Ashwin
இந்தியா ஆஸ்திரேலியா இடையே டெஸ்ட் தொடர் நடந்து வரும் நிலையில், பிரிஸ்பேனில் நடந்த 3வது டெஸ்ட் போட்டிக்கு பின் இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் சிறந்த ஸ்பின் பவுலரான அஸ்வின் பவுலிங்கில் நல்ல பார்மில் உள்ளார். பேட்டிங்கிலும் சிறப்பாக ஆடுகிறார்.
குறைந்தபட்சம் இன்னும் ஒரு ஆண்டுகளாவது விளையாடி இருக்க வேண்டிய அஸ்வின் திடீரென ஓய்வு பெற்றுள்ளது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணியில் இடம்பெற்ற அஸ்வின் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் போட்டியில் அவர் இடம்பெறவில்லை.
Ashwin Retirement
அடிலெய்டில் நடந்த 2வது டெஸ்ட்டில் அணியில் இடம்பித்த அஸ்வின் முதல் இன்னிங்சில் 22 ரன்கள் எடுத்தார்; ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார். ஆனால் 3வது டெஸ்ட்டில் அவர் பென்ச்சில் உட்கார வைக்கப்பட்டார். அணியில் புதிதாக சேர்ந்த ஒரு வீரருக்கே ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை என்றால் சோகமாக இருக்கும். அஸ்வின் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இதை எப்படி எதிர்கொள்ள முடியும்.
இந்த விரக்தியின் காரணமாகவே அஸ்வின் திடீர் ஓய்வு முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. பெர்த் டெஸ்ட்டின்போதே அஸ்வின் ஓய்வு முடிவு தெரிந்து விட்டதாக ரோகித் சர்மா சொன்னாலும், 3வது டெஸ்ட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்டதே அஸ்வினின் முடிவுக்கு முக்கியமான காரணம் என பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மா அஸ்வினை ஓரம் கட்டி வைப்பது இது முதன்முறை அல்ல; பல முறை இவ்வாறு செய்துள்ளார்.
டீமாக சொதப்பும் இந்தியா; தனி நபராக ஜொலிக்கும் பும்ரா - தொடர்ந்து முதல் இடம்
Reason Behind Ashwin Retirement
கடந்த ஆண்டு ஜூன் மாதம் லண்டனில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஆஸ்ரேலிய அணியில் வார்னர், ஹெட், கவாஜா என இடது கை ஆட்டக்காரர்கள் களமிறங்கிய நிலையில், இடது கை ஆட்டக்காரர்களின் விக்கெட்டை சொல்லி வைத்து எடுக்கும் அஸ்வின் அணியில் இடம்பெறவில்லை.
இங்கிலாந்து பிட்ச்களிலும் அஸ்வினால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று தெரிந்தும் கேப்டன் ரோகித் சர்மா அவரை அணியில் எடுக்கவில்லை என்று அப்போது குற்றம்சாட்டப்பட்டது. தென்னாபிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் களமிறங்கிய அஸ்வினை 2வது டெஸ்ட்டில் களமிறக்கவில்லை. இப்போதும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டது.
India vs Australia Test Series
வாய்ப்பு கிடைத்த அந்த அடிலெய்டு டெஸ்டிலும் ஆஸ்திரேலியாவின் முதல் நாள் பேட்டிங்கின்போதும் ரோகித் சர்மா அஸ்வினை சரியாக பயன்படுத்தமில்லை. அன்றைய நாளில் மார்னஸ் லபுஸ்சேனும், நாதன் மெக்ஸ்வீனியும் விக்கெட் இழக்காமல் நங்கூரம் போன்று ஆடிய நிலையில், அன்றைய நாளில் அஸ்வினுக்கு வெறும் ஒரே ஒரு ஓவர் மட்டுமே ரோகித் சர்மா கொடுத்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
வெளிநாட்டில் இந்தியா டெஸ்ட் மேட்ச் விளையாடும்பொதெல்லாம் ரோகித் சர்மா அஸ்வின் மீது நம்பிக்கை வைக்காமல் இருந்து வந்துள்ளார். ஆஸ்திரேலிய தொடரில் கூட ரோகித் சர்மாவும், பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் அஸ்வினுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரையே பிளேயிங் லெவனில் களமிறக்க விரும்பியதாகவும், வேறு வழியின்றிதான் 2வது டெஸ்ட்டில் அஸ்வினை களமிறக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் விரக்தி அடைந்ததான் காரணமாகவே அஸ்வின் தொடரில் பாதியிலேயே ஓய்வு முடிவை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிக முறை தொடர் நாயகன், அதிக முறை 5 விக்கெட் வீழ்த்தியவர்: சாதனைகளால் அலறவிட்ட அஸ்வின்