Ravindra Jadeja and Rishabh Pant
மீண்டும் சொதப்பிய ரோகித்
இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்ததால் இந்திய அணி வீரர்கள் அனைவரும் உள்ளூர் கிரிக்கெட் விளையாட வேண்டும் என பிசிசிஐ உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் ரஞ்சி கோப்பையில் விளையாடுகின்றனர்.
ரஞ்சி டிராபியில் ரோகித் சர்மா மும்பை அணிக்காகவும், விராட் கோலி டெல்லி அணிக்காகவும் விளையாடுகின்றனர். பெரும் எதிபார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கிய ரோகித் சர்மா ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் 19 பந்துகளை சந்தித்து வெறும் 3 ரன்களில் அவுட் ஆனார். 2வது இன்னிங்சில் 3 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் விளாசிய ரோகித் சர்மா 35 பந்தில் 28 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
Ranji trophy 2025
ஜெய்ஸ்வால் ஏமாற்றம்
இதேபோல் முமபை அணிக்காக இறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்சில் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். 2வது இன்னிங்சிலும் அவர் 26 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஷ்ரேயாஸ் ஐயர் முதல் இன்னிங்சில் 11 ரன்னில் நடையை கட்டிய நிலையில, 2வது இன்னிங்சிலும் 17 ரன்னில் பெவிலியன் திரும்பினார். ஷிவம் துபே இரண்டு இன்னிங்சிலும் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
2024 ஐசிசி டெஸ்ட் அணி: ரோகித், கோலிக்கு ஆப்பு; 3 இந்திய வீரர்களுக்கு இடம்; கேப்டன் யார்?
Rishap Pant
ரிஷப் பண்ட் படுமோசம்
மேலும் சவுஷ்ராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணிக்காக களம் கண்ட ரிஷப் பண்ட் முதல் இன்னிங்சில் வெறும் 1 ரன்னில் கேட்ச் ஆனார். 2வது இன்னிங்சிலும் அவர் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். கர்நாடக அணிக்கு எதிராக பஞ்சாப் அணியில் களமிறங்கிய சுப்மன் கில் முதல் இன்னிங்சில் வெறும் 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணியின் மற்ற வீரர்கள் சொதப்பினாலும் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மிகச்சிறப்பாக விளையாடி 12 விக்கெட்டுகள் வீழ்த்தி சவுராஷ்டிரா அணியை வெற்றி பெற வைத்தார். அதாவது டெல்லி அணிக்கு எதிராக சவுராஷ்டிரா அணி மோதிய நிலையில், முதல் இன்னிங்சில் டெல்லி 188 ரன்களில் சுருண்டது. ஜடேஜா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 271 ரன்கள் குவித்தது.
Jadeja Match Winner
ஆட்டநாயகன் ஜடேஜா
2வது இன்னிங்சில் டெல்லி அணி 94 ரன்களில் சுருள, சவுராஷ்டிரா அணி 15 ரன்கள் இலக்கை எளிதில் எட்டிப்பிடித்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஜடேஜா 5 விக்கெட்டுகளும், 2வது இன்னிங்சில் 38 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளும் என மொத்தம் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங்கிலும் 36 பந்தில் 38 ரன்கள் எடுத்தார். ஆல்ரவுண்டராக ஜொலித்த அவர் ஆட்டநாயகன் விருது வென்றார்.
IND vs ENG 2nd T20: சஞ்சு சாம்சன் பார்த்த வேலை; 2வது டி20யில் இங்கிலாந்து பவுலர் அதிரடி நீக்கம்!