Ravindra Jadeja
ஐசிசி டெஸ்ட் அணி
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2024ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கிய வீரர்களை அடிப்படையாக வைத்து ஐசிசி ஆண்கள் டெஸ்ட் அணியை அறிவித்துள்ளது. இந்த அணிக்கு ஆஸ்திரேலிய கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வீரர்கள் தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய 3 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இருப்பினும் இந்த வரிசையில் இரண்டு சிறந்த இந்திய ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு இடம் இல்லை. பெர்த்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்த போதிலும், கடந்த ஆண்டு 10 டெஸ்ட் போட்டிகளில் 24.52 என்ற ஏமாற்றமளிக்கும் சராசரியுடன் 417 ரன்கள் மட்டுமே விராட் கோலி எடுத்தார். இதேபோல் இந்திய டெஸ்ட் கேப்டன் ரோகித் சர்மாவும் சிறப்பாக செயல்படவில்லை.
Pat Cummins
கம்மின்ஸ் கேப்டன்
கடந்த ஆண்டு 14 டெஸ்ட் போட்டிகளில் 24.76 சராசரியுடன் 619 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தொடரில் 6 இன்னிங்ஸ்களில் 31 ரன்கள் மட்டுமே எடுத்தார். மோசமான செயல்பாட்டால் ரோகித், கோலி என இருவருக்குமே இடம் கிடைக்கவில்லை.
கம்மின்ஸ் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஐசிசி ஆண்கள் டெஸ்ட் அணியின் கேப்டனாக இடம் கிடைத்துள்ளது. இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த ஆண்டில் 54.74 சராசரியுடன் 1,478 ரன்கள் எடுத்து வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதனால் அவருக்கு ஐசிசி அணியில் இடம் கிடைத்துள்ளது.
தரவரிசையில் முதல் இடம்! ஐசிசியின் ஒருநாள் டீமில் ஒருவருக்கு கூட இடமில்லை - இந்தியாவுக்கு நேர்ந்த அவலம்
Jasprit Bumrah
ஜஸ்பிரித் பும்ரா
ஜஸ்பிரித் பும்ரா 2024ம் ஆண்டில் 14.92 என்ற சராசரியுடன் 71 விக்கெட்டுகளுடன் விக்கெட் வீழ்த்திய பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதனால் அவர் எதிர்பார்த்தபடியே ஐசிசி டெஸ்ட் அணியில் இருக்கிறார். இதேபோல் ஜடேஜாவும் கடந்த ஆண்டு டெஸ்ட்டில் 527 ரன்களையும், 48 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளதால் அவருக்கும் ஐசிசி அணியில் இடம் கிடைத்துள்ளது.
இவர்கள் தவிர இங்கிலாந்து சார்பில் பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி ப்ரூக் மற்றும் ஜேம் ஸ்மித் என 4 வீரர்கள் ஐசிசி டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளனர். நியூசிலாந்து சார்பில் கனே வில்லியம்சன், மேட் ஹென்ரி 2 பேர் இடம்பெற்றுள்ளனர். இலங்கையின் கமிந்து மென்டிசும் ஐசிசி டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.