
'மினி உலகக்கோப்பை' எனப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி மாதம் 19ம் தேதி முதல் மார்ச் மாதம் 9ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பாகிஸ்தானில் விளையாடுகின்றன. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகள் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நேற்று மோதின.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழந்து 330 ரன்கள் குவித்தது. கிளைன் பிளிப்ஸ் அதிரடி சதம் (74 பந்தில் 106 ரன்கள்) விளாசினார். பின்பு விளையாடிய பாகிஸ்தான் 252 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் நியூசிலாந்து வெற்றி ஒருபக்கம் இருக்க, அந்த அணி வீரர்கள் சோகமடையும் வகையில் நியூசிலாந்து அதிரடி வீரரும், சிஎஸ்கேவுக்காக ஐபிஎல்லில் விளையாடும் வீரருமான ரச்சின் ரவீந்திராவுக்கு தலையில் பலத்த அடிபட்டது.
அதாவது 2வது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி இமாலய இலக்கை நோக்கி பேட்டிங் நிலையில், நியூசிலாந்து பீல்டிங் செய்தது. 38வது ஓவரில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் குஷ்தில் ஷா டீப் பேக்வேர்டு ஸ்கொயர் லெக் நோக்கி ஒரு பவர்புல் ஷாட்டை அடித்தார். ஸ்கொயர் லெக் திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த ரச்சின் ரவீந்திரா அந்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்றார்.
அப்போது கடாபி மைதானத்தில் மோசமான வெளிச்சத்தில் கேட்சை தவறாக கணித்ததால் அந்த பந்து நேராக ரச்சின் ரவீந்திராவின் தலைக்கு கீழே நெற்றியில் வேகமாக தாக்கியது. உடனடியாக அவரது நெற்றியில் இருந்து ரத்தம் மளமளவென கொட்டியது. இதனை பார்த்து நியூசிலாந்து வீரர்களும், பாகிஸ்தான் வீரர்களும்,போட்டியை பார்த்து கொண்டிருந்த ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மருத்துவ குழுவினர் மைதானத்திற்குள் நுழைந்து அவரை வெளியே அழைத்து சென்றனர்.
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடாத 3 ஸ்டார் பிளேயர்ஸ்!
ரச்சின் ரவீந்திராவுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டது. அவருக்கு தலையில் காயம் மதிப்பீடு (HIA) செய்யப்பட்டது. உடனடியாக மருத்துவ சிகிச்சை செய்யப்பட்டதால் அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டார். இருப்பினும், நிலையான மூளையதிர்ச்சி இருப்பதால், ரச்சின் ரவீந்திராவை தொடர்ந்து கண்காணித்து வருவதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கிரிக்கெட் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் லாகூரின் கடாபி மைதானத்தில் சரியான வெளிச்ச நிலைமைகளை உறுதி செய்யாததற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை விமர்சித்து வருகின்றனர். அதாவது போட்டி நடந்த மைதானத்தில் இருந்த மின் விளக்குகள் போதிய அளவில் வெளிச்சத்தை கொடுக்கவில்லை. இதனால் பீல்டிங் செய்த நியூசிலாந்து வீரர்கள் அதிக சிரமத்தை சந்தித்தனர்.
மின்வெளிச்சம் அதிகமாக இல்லாததால் பந்தை சரியாக கணித்து அவர்களால் பிடிக்க முடியவில்லை. ரச்சின் ரவீந்திரா பிடிக்க சென்றதும் ஈஸியான கேட்ச் தான். ஆனால் போதிய வெளிச்சம் இல்லாததால் பந்தின் பாதையை அவரால் கணிக்க முடியாமல், பந்து நேராக நெற்ற்றியில் தாக்கியுள்ளது. முக்கியமான சாம்பியன்ஸ் டிராபி தொடங்க உள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மைதானங்கள சரியாக பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதனல் கொதித்தெழுந்த ரசிகர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ரச்சின் ரவீந்திரன் சிறந்த ஃபீல்டர்களில் ஒருவர், ஆனால் அவரால் பந்தைப் பார்க்க முடியவில்லையா? கடாபி மைதானத்தில் உள்ள ஃப்ளட்லைட்கள் எவ்வளவு மோசமாக உள்ளன என்பதை இது நிரூபிக்கிறது'' என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
"சர்வதேச போட்டிகளை இங்கு நடத்த ஐசிசி எப்படி அனுமதித்தது? வீரர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பாகிஸ்தான் சரியான வசதிகளை வழங்க முடியாவிட்டால், சாம்பியன்ஸ் டிராபியை துபாய்க்கு மாற்றுங்கள். ரச்சின் ரவீந்திரா விரைவில் குணமடைய பிரார்த்திகிறோம்'' என்று பல்வேறு ரசிகர்கள் கருத்துகளை கூறி வருகின்றனர்.
'ஜடேஜா உங்க கண்ணுக்கு தெரியவில்லையா?' ஊடகங்களை விமர்சித்த அஸ்வின்! என்ன நடந்தது?