மாற்றுத் திறனாளிகளுக்கான 17வது பாராஒலிம்பிக் போட்டிகள் பாரிசில் கண்கவர் நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்கி உள்ளன. தொடக்க விழாவில் கலை நிகழ்ச்சிகள், நடனம், சாகசங்கள், வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு நடைபெற்றது. இப்போட்கள் அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.
23
Paralympics Games Paris 2024
போட்டியில் 184 நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரத்து 400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட 84 போட்டியாளர்கள் களம் காண்கின்றனர். இது வரை நடைபெற்ற பாராலிம்பிக் போட்டிகளிலேயே அதிக போட்டியாளர்களுடன் இந்தியா பங்கேற்பது இது தான் முதல் முறை. மொத்தமாக 12 வகையான விளையாட்டுகளில் பங்கேற்று இந்தியர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர்.
33
Paralympics Games Paris 2024
இந்நிலையில் பாராஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “பாராஒலிம்பிக்கில் பங்கேற்கும் எங்கள் குழுவிற்கு 140 கோடி இந்தியர்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு விளையாட்டு வீரரின் தைரியமும், உறுதியும் நாட்டின் உத்வேகத்திற்கு ஆதாரமாக உள்ளது. ஒவ்வொருவரும் தங்களது வெற்றிக்காக உறுதியாக உள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.