அனுபவ வீரர்கள் இருக்கும்போது இளம் வீரர்கள் எதற்கு? சிஎஸ்கே பேட்டிங் கோச் பேட்டி!

Published : Apr 12, 2025, 02:15 PM IST

சிஎஸ்கேவில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவது கடினம் என்று பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

PREV
14
அனுபவ வீரர்கள் இருக்கும்போது இளம் வீரர்கள் எதற்கு? சிஎஸ்கே பேட்டிங் கோச் பேட்டி!

Michael Hussey says it is difficult to give opportunities to young players in CSK: ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ரசிகர்களின் அளப்பரிய வரவேற்பை பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மிகவும் மோசமாக விளையாடி அதல‌பாதாளத்தில் உள்ளது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய சிஎஸ்கே அதன்பிறகு தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி அடைந்து வெறும் 2 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

24
CSK, IPL, Cricket

பேட்டிங், பீல்டிங்கில் சிஎஸ்கே படுமோசமாக இருக்கிறது. பவுலிங்கில் எதிர்பார்த்த அளவு சிறப்பாக செயல்படவில்லை. சிஎஸ்கேவின் கோட்டையான சென்னை சேப்பாக்கத்தில் அந்த அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருவது ரசிகர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மற்ற அணிகள் துணிச்சலுடன் இளம் வீரர்களை களமிறக்கி வெற்றி வாகை சூடும் நிலையில், சிஎஸ்கே அணியோ அதிரடி ஆட முடியாத அனுபவ வீரர்களை வைத்து தடுமாறி வருகிறது.

சிஎஸ்கேவில் அனுபவ வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, விஜய் சங்கர், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி என அனுபவ வீரர்கள் அனைவரும் கடுமையாக சொதப்பி வருகின்றனர். வெளியே அன்ஷுல் காம்போஜ், ஆண்ட்ரே சித்தார்த், வான்ஷ் பேடி என திறமையான இளம் வீரர்கள் இருக்கும் நிலையில், சிஎஸ்கே இவர்களை அணியில் எடுக்க மறுக்கிறது. 6 போட்டிகள் முடிந்த நிலையில், நேற்றைய போட்டியில் தான் அன்ஷுல் காம்போஜ் அணியில் எடுக்கப்பட்டார். மற்ற இளம் வீரர்கள் யாருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

IPL: குஜராத் அணிக்கு பெரும் பின்னடைவு! அதிரடி வீரர் விலகல்! மாற்று வீரர் யார்?

34
MS Dhoni, Ravichandran Ashwin

இதனால் சிஎஸ்கே இளம் வீரர்களை நம்பிக்கை வைத்து அணியில் எடுக்க வேண்டும் என முன்னள் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அணியில் இளம் வீரர்களை எடுப்பது கஷ்டம் என்று சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி கூறியுள்ளார். கொல்கத்தாவுக்கு எதிரான போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''இளைஞர்களைப் பொறுத்தவரை, அவர்கள் சிறப்பாக செயல்படத் தயாராக இருக்கும்போது நாங்கள் அவர்களைத் தேர்வு செய்ய விரும்புகிறோம். வாய்ப்புக்காகக் காத்திருக்கும் சில நல்ல வீரர்கள் எங்களிடம் உள்ளனர். அதைப் பற்றி எந்த கேள்வியும் இல்லை. ஆனால் வளர்ந்து வரும் சவாலுக்குத் தயாராகும் வரை அவர்களை அணியில் விரைவாக சேர்க்க அணி நிர்வாகம் விரும்பவில்லை'' என்றார்.

44
MS Dhoni, CSK, IPL

தொடர்ந்து அனுபவ வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லையே என்ற கேள்விக்கு பதில அளித்த மைக்கேல் ஹஸ்ஸி, ''அதில் எனக்கு உடன்பாடு இல்லை. உங்களுக்குத் தெரியும், எங்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசிக் காலத்தில் வீரர்கள் கடந்த காலங்களில் சிஎஸ்கேவில் வந்து விளையாடியுள்ளனர். நான் ஷேன் வாட்சனை நினைக்கிறேன். அஜிங்க்யா ரஹானேவை நினைக்கிறேன், அவர்கள் சிஎஸ்கேவுக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள். எனவே, எங்களிடம் உள்ள வீரர்கள் இன்னும் நல்ல கிரிக்கெட்டைக் கொண்டுள்ளனர். மேலும் அவர்கள் எங்களுக்கு நிறைய வழங்க முடியும் என்று இன்னும் நினைக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

சிஎஸ்கேவின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி இளம் வீரர்களை ஒதுக்கி விட்டு அனுபவ வீரர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளது ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 'இளம் வீரர்களை அணியில் சேர்க்காதவரை சிஎஸ்கே வெற்றியை நினைத்துக் கூட பார்க்க முடியாது' என்று ரசிகர்கள் கருத்துகளை கூறி வருகின்றனர்.

CSK vs KKR: தோனி தலைமையில் சிஎஸ்கே படுதோல்வி! அசால்ட்டாக ஊதித்தள்ளிய கொல்கத்தா!
 

Read more Photos on
click me!

Recommended Stories