ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்று மோதும் நிலையில், தோனி எந்த இடத்தில் பேட்டிங் செய்ய களமிறங்குவார் என்பது குறித்து ருதுராஜ் கெய்க்வாட் அப்டேட் செய்துள்ளார்.
MI vs CSK: Where will Dhoni batting: ஐபிஎல்லில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. சிஎஸ்கே முன்னாள் கேப்டன் தோனியின் கடைசி சீசனாக இது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தோனியின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். இந்த ஐபிஎல் சீசனில் தோனி எந்த இடத்தில் பேட்டிங் செய்வார்? என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
24
Ruturaj Gaikwad and MS Dhoni
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், அந்த அணியின் அடையாளமான MS தோனி மற்றும் அவர்களின் எதிர்காலம் குறித்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் தொடக்கத்திற்கு முன்னதாக கருத்து தெரிவித்தார். 43 வயதிலும் வலிமையாக இருக்கும் தோனி, ஐந்து முறை சாம்பியனான அணியின் ஒருங்கிணைந்த அங்கமாக இருக்கிறார்.
அவர் சென்னை அணிக்காக பினிஷர் ரோலை தொடர்ந்து செய்து வருகிறார். ஆனால் பல ஆண்டுகளாக அவரது திறன் கணிசமாக குறைந்துள்ளது. அனுபவம் வாய்ந்த தோனி சில ஓவர்கள் பேட் செய்ய வருகிறார். தனது அதிரடி பவர்-ஹிட்டிங் திறனைக் காட்டுகிறார். ஒவ்வொரு பந்தையும் மைதானத்திற்கு வெளியே அடிக்க முயற்சிக்கிறார்.
''அவர் (தோனி) எதை அடைய முயற்சிக்கிறாரோ அல்லது IPL-ல் அவரது பங்கு என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்து அவரது பயிற்சி பெரும்பாலும் வரையறுக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். எனவே, இது மிகவும் எளிமையானது, முடிந்தவரை சிக்ஸர்களை அடிக்க முயற்சிப்பதிலும், சரியான ஸ்விங்கை பெற முயற்சிப்பதிலும், சிறந்த நிலையில் இருக்க முயற்சிப்பதிலும் கவனம் செலுத்துகிறார்" என்று கெய்க்வாட் MI அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக ESPNcricinfo-வில் கூறினார்.
"ஆரம்பத்தில் அவர் அதைத்தான் செய்ய முயன்றார் என்று நினைக்கிறேன். அவர் உடல் தகுதி இல்லாமல் இருக்கிறார் என்று நான் நினைக்கவில்லை. அவர் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சச்சின் டெண்டுல்கர் கூட 50 வயதில் சிறப்பாக விளையாடி வருகிறார். இன்னும் பல வருடங்கள் உள்ளன" என்று ருத்ராஜ் கெய்க்வாட் மேலும் கூறினார்.
44
IPL, sports news in tamil, MS Dhoni
சமீபத்தில், தோனி தனது கிரிக்கெட் பயணத்தை நினைவு கூர்ந்தார். இது 2005-ல் தொடங்கியது. இன்னும் சில ஆண்டுகள் விளையாட விரும்புவதாக அவர் வெளிப்படுத்தினார். "நான் பள்ளியில் இருந்தபோது ஒரு குழந்தையாக எப்படி விளையாடினேனோ, அதேபோல் விளையாட விரும்புகிறேன். நாங்கள் கிரிக்கெட் விளையாட செல்வோம். வானிலை சரியில்லாதபோது, கால்பந்து விளையாடுவோம். அதேபோன்ற ஆர்வத்துடன் விளையாட விரும்புகிறேன்," என்று அவர் கடந்த மாதம் ஒரு செயலியை அறிமுகப்படுத்தும் விழாவில் கூறினார்.
தோனியின் இருப்பு அணிக்கு எப்படி ஊக்கமளிக்கிறது என்பதை கெய்க்வாட் விளக்குகிறார். "தோனியை தினமும் பார்க்கிறோம். இது எங்களுக்கு நிறைய ஊக்கமளிக்கிறது. நிறைய புதிய வீரர்கள் அணியில் இணைந்துள்ளனர். சில நேரங்களில் அவர்கள் பந்தை சரியாக அடிக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள்," என்று கெய்க்வாட் கூறினார்.