ஐபிஎல்லில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், ஐபிஎல்லில் அதிக போட்டிகளில் வெற்றி பெற்றது யார்? சென்னை சேப்பாக்கத்தில் கிங் யார்? என்பது குறித்து பார்க்கலாம்.
IPL: CSK vs MI Head to Head: உலகின் மாபெரும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் 2025 நேற்று முதல் தொடங்கி விட்டது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆர்சிபி அணி கொல்கத்தாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஐபிஎல்லில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. மாலை 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
24
CSK vs MI, Cricket news, Dhoni
இரவு 7.3 மணிக்கு தொடங்கும் போட்டியில் பரம எதிரிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் -மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் போட்டி மீதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும் உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த இந்த இரண்டு அணிகளும் பலமுறை ஐபிஎல் கோப்பையை ஏந்தியுள்ளன. இதனால் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் போட்டி என்பது இந்தியா, பாகிஸ்தான் போட்டியை போன்று மிகவும் பரபரப்பாக இருக்கும்.
இன்றைய ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ருந்த்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணியும் களமிறங்குகின்றன. ஐபிஎல் என்று வந்துவிட்டேலே சென்னையை விட மும்பை ஒருபடி மேலே தான் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே மொத்தம் 39 போட்டிகளில் நடந்துள்ள நிலையில், MI அணி 21 முறை வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் CSK 18 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
44
IPL 2025, CSK vs MI Head to Head, Records
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் 8 முறை மோதியுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்றில் வெற்றியும், மும்பை இந்தியன்ஸ் ஐந்து முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஆனால் கடைசியாக நடந்த 5 போட்டிகள் சிஎஸ்கே 4 போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறது. அதுவும் மும்பையில் நடந்த 3 ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றிக் கனியை பறித்துள்ளது.
மும்பைக்கு எதிராக சிஸ்கேவின் அதிகப்பட்ச ஸ்கோர் 218 ரன்கள் ஆகும். சிஎஸ்கேவுக்கு எதிராக மும்பையின் அதிகப்பட்ச ஸ்கோர் 219 ரன்கள் ஆகும்.மும்பைக்கு எதிராக சிஸ்கேவின் குறைந்தபட்ச ஸ்கோர் 79 ரன்கள் ஆகும். சிஎஸ்கேவுக்கு எதிராக மும்பையின் அதிகப்பட்ச ஸ்கோர் 136 ரன்கள் ஆகும். மும்பைக்கு எதிராக சிஸ்கேவின் சுரேஷ் ரெய்னா தனிநபர் அதிகப்பட்சமாக 710 ரன்கள் எடுத்துள்ளார். சிஎஸ்கேவுக்கு எதிராக மும்பையின் ரோகித் சர்மா அதிகப்பட்சமாக 805 ரன்கள் எடுத்துள்ளார்.