கேகேஆருக்கு எதிராக 1000 ரன்களை குவித்து சாதனை படைத்த விராட் கோலி!

Virat Kohli Completes 1000 Runs against KKR in IPL 2025 : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 தொடரின் முதல் லீக் போட்டியில் விராட் கோலி 38 ரன்கள் எடுத்ததன் மூலமாக 1000 ரன்களை கடந்து சாதனை படைத்தார்.

Virat Kohli Completes 1000 Runs against KKR in IPL 2025 at Eden Gardens in Tamil rsk

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் தொடக்க வீரர் விராட் கோலி, இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக 1000 ரன்களுக்கு மேல் எடுத்த மூன்றாவது வீரர் ஆனார். ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த போட்டியில், முன்னாள் ஆர்சிபி கேப்டன் 36 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் நான்கு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் அடங்கும்.

Virat Kohli Completes 1000 Runs against KKR in IPL 2025 at Eden Gardens in Tamil rsk
KKR vs RCB, IPL 2025, IPL 2025 Opening Ceremony

இந்த இன்னிங்ஸின் மூலம், மூன்று முறை சாம்பியனான கொல்கத்தா அணிக்கு எதிராக 1,000 ரன்களை கோலி கடந்தார். இந்த சாதனையை நிகழ்த்திய மற்ற இரண்டு வீரர்கள் முன்னாள் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் (1093) மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா (1070).


Eden Gardens, Kolkata, Kolkata Knight Riders, Indian Premier League

முன்னதாக, ஐபிஎல் 2025 தொடக்க விழாவுக்கு முன், பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி விராட் கோலிக்கு 'ஐபிஎல் 18' நினைவுப் பரிசை வழங்கினார். விராட் கோலி இந்த பணக்கார லீக் தொடங்கியதிலிருந்து ஆர்சிபியுடன் இருந்து வருகிறார். மேலும் 2011 முதல் 2023 வரை அணியை வழிநடத்தினார். அவர் 252 போட்டிகளில் 8,004 ரன்கள், 8 சதங்கள் மற்றும் 55 அரை சதங்களுடன் அதிக ரன்கள் எடுத்த வீரர் ஆவார்.

Virat Kohli, Ajinkya Rahane, Rajat Patidar

2016 சீசனில் அவர் 973 ரன்கள் குவித்ததுடன் 4 சதங்கள் அடித்தார். இருப்பினும், ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரராக இருந்தும் அவரால் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஐபிஎல் 2025 தொடக்க ஆட்டம் விராட் கோலியின் 400வது டி20 போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. பாராட்டுகளுக்கு முன், விராட் நடனமாடி ஷாருக் கானுடன் இணைந்து 'ஜூமே ஜோ பதான்' பாடலுக்கு நடனமாடினார்.

Royal Challengers Bengaluru, IPL 2025 KKR vs RCB Live Score

ஷாருக் கானிடம் நடனமாடக் கேட்ட கோலி: ஐபிஎல் தொடக்க விழாவின் போது ஷாருக் கான் விராட் கோலியிடம், இந்திய அணி ஐபிஎல் போட்டியில் சிக்ஸர் அடித்தாலோ, மேட்ச் ஜெயிச்சாலோ எப்படி கொண்டாடுவாங்கன்னு கேட்டார். என்னுடைய 'பதான்' பாடலுக்கு ஒரு ஸ்டெப் போட்டு காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

Krunal Pandya, KKR vs RCB Live Score, KKR vs RCB IPL Match

'கிங் கான்' வேண்டுகோளை விராட் எப்படி மறுக்க முடியும்? விராட் எஸ்.ஆர்.கே.வுடன் இணைந்து பதான் பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோ பதிவேற்றப்பட்டு சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கான பார்வைகளை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

vuukle one pixel image
click me!