IPL: 4 reasons RCB defeated KKR: உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இதில் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. கேப்டன் அஜிங்யே ரஹானே 31 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 56 ரன்கள் எடுத்தார். சுனில் நரைன் 26 பந்தில் 44 ரன்கள் அடித்தார். ஆர்சிபி தரப்பில் குர்னால் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
24
KKR vs RCB,IPL 2025, Sports news in tamil,
பின்பு சவாலான இலக்கை நோக்கி பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 16.2 ஓவர்களில் 3 விக்கெட் மட்டுமே இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர் பில் சால்ட் 31 பந்தில் 56 ரன்கள் விளாசினார். விராட் கோலி 36 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 59 ரன்கள் நொறுக்கினார். ஆர்சிபி வெற்றி பெற்றதற்கான 5 காரணங்களை இங்கு பார்க்கலாம்.
குர்னால் பாண்ட்யா
ஆர்சிபி வெற்றி பெற முதல் காரணம் இடது கை ஸ்பின்னர் குர்னால் பாண்ட்யா தான். ஒரு கட்டத்தில் 10 ஓவர்களில் 107/2 என்று வலுவாக இருந்த கொல்கத்தாவை தனது சிறப்பான பவுலிங்கால் முடக்கினார். சரியான லைன் அண்ட் லெந்த்தில் பந்து வீசிய குர்னால் பாண்ட்யா 4 ஓவர்களில் 29 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி மேட்ச் வின்னராக ஜொலித்தார்.
ஆர்சிபியின் தொடக்க வீரர் பில் சால்ட் தொடக்கம் முதல் பதற்றமின்றி பந்துகளை விளாசித் தள்ளினார். மிக முக்கியமாக வருண் சக்கரவர்த்தியை செட்டில் ஆக விடாமல் அவரின் பந்துகளை நொறுக்கியது ஆர்சிபிக்கு பெரும் பலம் அளித்தது. 31 பந்தில் 9 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 56 ரன்கள் விளாசி ஆர்சிபிக்கு வெற்றி பெற வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.
விராட் கோலி
ஆர்சிபி அணியின் முதுகெலும்பாக இருக்கும் விராட் கோலி நேற்றும் தான் ஏன் கிரிக்கெட்டின் கிங் என்பதை நிரூபித்தார். பில் சால்ட்டுடன் இணைந்து ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய கோலி கடைசி வரை களத்தில் இருந்து ஆர்சிபியை முதல் வெற்றி பெற வைத்துள்ளார். தனது டிரேட் மார்க் ஷாட்களால 4 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 36 பந்தில் 59 ரன்கள் விளாசிய விராட் கோலி நாட் அவுட் ஆக திகழ்ந்தார்.
44
Virat kohli, Krunal Pandya, RCB
நம்பிக்கை வெற்றி தரும்
நேற்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் அதிதீவிர நம்பிக்கை அப்பட்டமாக தெரிந்தது. ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி 10 ஓவர்களில் 100 ரன்களை தாண்டியபோது இந்த மேட்ச் ஆர்சிபிக்கு அவ்வளவு தான் என அனைவரும் நினைத்தனர். ஆனால் ஆர்சிபி அணி வீரர்கள் மனம் தளராமல் போராடி நம்பிக்கையுடன் செயல்பட்டு ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பினார்கள். ஆர்சிபி அணி இப்படி தொடர்ந்து அசத்தினால் அவர்கள் கோப்பை வாங்குவதை யாராலும் தடுக்க முடியாது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.