அவுட் ஆஃப் ஸ்டேஷனில் இருக்கும் அஜித் அகர்கர்..? இந்திய தேர்வு குழுவை போட்டி போட்டு வறுத்தெடுக்கும் வீரர்கள்

Published : Oct 27, 2025, 11:43 AM IST

இந்திய கிரிக்கெட் அணியில் வீரர்கள் தேர்வு முயைாக நடைபெறவில்லை என்று சுட்டிக்காட்டும் வீரர்கள் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மீது போட்டிபோட்டு குற்றம் சாட்டி வருகின்றனர்.

PREV
16
ஆஸி. தொடரில் ரஹானே..

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 - 1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து இரு அணிகள் இடையேயான டி20 தொடர் வருகின்ற புதன் கிழமைத் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மீது ரஹானே, கரூண் நாயர் உள்ளிட்ட வீரர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

26
வயது வெறும் எண்ணிக்கை மட்டுமே

37 வயதான அஜங்கியா ரஹானே அண்மையில் நடைபெற்ற ரஞ்சிகோப்பை தொடரில் சண்டிகர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 159 ரன்கள் சேர்த்து கவனம் ஈர்த்தார். இந்நிலையில், வயது என்பது எனக்கு வெறும் எண்ணிக்கை மட்டுமே. நாம் எந்த அளவிற்கு உத்வேகமாகவும், களத்தில் எப்படி விளையாடுகிறோம் என்பதும் மட்டுமே முக்கியம்.

36
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அனுபவம் முக்கியம் பாஸ்..

ரெட் பால் கிரிக்கெட்டில் அனுபவம் மிகவும் முக்கியமானது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் நான் இடம்பெறுவேன் என நினைத்தேன். இதற்காக என்னை தயார்படுத்தி வந்தேன். ஆனால் என்னை அணியில் சேர்க்கவில்லை. இந்திய அணிக்காக பல ஆண்டுகளாக உழைத்திருக்கிறேன். என்னைப் போன்ற அனுபவம் வாய்ந்த வீரருக்கு நிச்சயம் கம்பேக் கொடுப்பதற்கான வாய்ப்பினை தேர்வுக்குழு வழங்க வேண்டும். ஆனால் தேர்வு குழுவினர் என்னிடம் பேசவே இல்லை” என்று குற்றம் சாட்டி உள்ளார்.

46
8 ஆண்டுகளுக்கு பின் அணிக்கு திரும்பிய கருண் நாயர்

இதே போன்று மற்றொரு நட்சத்திர வீரர் கரூண் நாயர், ரஞ்சி தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து 8 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட அவர் 4 போட்டிகளில் வெறும் 205 ரன்களை மட்டும் சேர்த்த நிலையில் மீண்டும் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

56
அனைவருக்கும் சமமான வாய்ப்பு..?

இது தொடர்பாக பேசிய அஜித் அகர்கர், கருண் நாயரிடம் நாங்கள் இன்னும் அதிகமாக எதிர்பார்த்தோம். ஒவ்வொரு வீரருக்கும் 15 - 20 வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இதனை எல்லா நேரங்களிலும் பின்பற்ற முடியாது” என்று தெரிவித்தார். இதனால் கருண் நாயருக்கு இந்திய அணியில் இடம் இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்ட நிலையில் ரஞ்சி போட்டியில் மீண்டும் தனது பலத்தை நிரூபித்துள்ளார்.

66
பேட்டால் பதில் சொன்ன கருண்

கோவா அணிக்கு எதிரான போட்டியில் தனி ஒருவனாக போராடிய கருண் நாயர் 174 ரன்கள் குவித்து அசத்தினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கருண் தனது பேட்டால் இந்திய தேர்வுக் குழுவுக்கு பதில் அளித்துள்ளதாக விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories