ரோகித் சர்மா, விராட் கோலி விரைவில் ஓய்வு?.. இருவரும் சொன்ன அந்த விஷயம்.. ரசிகர்கள் ஷாக்!

Published : Oct 26, 2025, 06:06 PM IST

ரோகித் சூப்பர் பார்மில் உள்ளார். கோலியும் பார்முக்கு திரும்பி விட்டார். ஆகவே இருவரும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி உலககோப்பை அணியில் இடம்பிடிப்பார்கள் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.

PREV
14
இந்தியா-ஆஸ்திரேலியா ஓடிஐ தொடர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி சிட்னியில் நடந்த கடைசி ஓடிஐயில் 9 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. இந்த தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மாவின் பேட்டிங்கை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த ரோகித் சர்மா 2வது ஓடிஐயில் அரை சதமும், 3வது ஓடிஐயில் அதிரடி சதமும் (121 ரன்) அடித்து தொடர் நாயகன் விருது வென்று ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

24
ரோகித், கோலி உலகக்கோப்பையில் விளையாடுவார்களா?

அதே வேளையில் முதல் இரண்டு போட்டிகளிலும் விராட் கோலி டக் அவுட் ஆனதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் 3வது ஓடிஐயில் கோலி 74 ரன்கள் அடித்து சூப்பராக விளையாடினார். 2027ம் ஆண்டு ஓடிஐ உலகக்கோப்பை நடைபெற உள்ள நிலையில், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகிய இருவரும் அதில் விளையாடுவார்களா? என்பதே இப்போது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

34
விரைவில் ஓய்வா?

ரோகித் சூப்பர் பார்மில் உள்ளார். கோலியும் பார்முக்கு திரும்பி விட்டார். ஆகவே இருவரும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி உலககோப்பை அணியில் இடம்பிடிப்பார்கள் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில் ஓடிஐ உலகக்கோப்பைக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் உள்ளது. அதுவரை இந்தியாவுக்கு ஓடிஐ போட்டிகள் அதிகம் இல்லை.

மேலும் இருவரின் பார்ம் தொடர வேண்டும். மிக முக்கியமாக இருவரின் உடற்தகுதியும் உலகக்கோப்பை வரை நிலையாக இருக்க வேண்டும். ஆகையால் இருவரும் விரைவில் ஓடிஐயில் இருந்தும் ஓய்வு பெறுவார்கள் என ஒருசிலர் கூறி வருகின்றனர்.

44
ரவி சாஸ்திரி கேட்ட கேள்வி

இந்த நிலையில், 3வது ஓடிஐ முடிந்தவுடன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியிடம் 2027ம் ஆண்டு உலகக்கோப்பையில் விளையாடுவீர்களா? என்று ரவி சாஸ்திரி கேள்வி எழுப்பினார். அப்போது கோலி, ''இந்த நாட்டுக்கு வந்து இவ்வளவு பெரிய கூட்டத்துக்கு முன்பு விளையாட விரும்பினோம். நன்றாக விளையாடினோம். மக்களின் ஆதரவுக்கு நன்றி'' என்றார். ரோகித், ''நன்றி ஆஸ்திரேலியா'' என்று கூறி முடித்தார்.

ஓய்வு பெற அதிக வாய்ப்பு

உலகக்கோப்பையில் விளையாடுவது குறித்து இருவரும் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கவில்லை. மேலும் இருவரும் விளையாடுவது குறித்து பிசிசிஐம் ஆர்வம் காட்டவில்லை. ஆகவே கோலி, ரோகித் 2027 உலகக்கோப்பைக்கு முன்பாக ஓய்வுபெறவே அதிக வாய்ப்புகள் உள்ளன.

Read more Photos on
click me!

Recommended Stories