இனி மும்பையை ஜெயிக்கிறது கஷ்டம்! பழைய பன்னீர்செல்வமாக வந்த பும்ரா! அதே மிரட்டல் வேகம்!

Published : Apr 07, 2025, 08:13 AM IST

உலகின் நம்பர் பவுலரான ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்துள்ளார். இதனால் அந்த அணி மிகப்பெரும் பலம் பெற்றுள்ளது.

PREV
14
இனி மும்பையை ஜெயிக்கிறது கஷ்டம்! பழைய பன்னீர்செல்வமாக வந்த பும்ரா! அதே மிரட்டல் வேகம்!

Jasprit Bumrah rejoined Mumbai Indians: ஐபிஎல் கிரிக்கெட் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடந்து வரும் நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ்‍-ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. 4 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி ஒன்றில் வெற்றி பெற்று, மூன்றில் தோல்வி அடைந்துள்ளது. அதே வேளையில் ஆர்சிபி 3 போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்று ஒன்றில் தோல்வியை சந்தித்துள்ளது.

24
Jasprit Bumrah, Mumbai Indians

தொடர் தோல்விகளை தழுவியிருப்பதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மகிச்சியளிக்கும் விதமாக உலகின் நம்பர் 1 பவுலர் ஜஸ்பிரித் பும்ரா அணியினருடன் இணைந்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்த பும்ரா, அதன்பிறகு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவில்லை. 

அதன்பிறகு காயத்தில் இருந்து மீண்ட அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடாமியில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். அந்த பயிற்சி வெற்றிகரமாக முடிந்து தேசிய கிரிக்கெட் அகடாமி உடற்தகுதி சான்றிதழ் அளித்த நிலையில், பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணியுடன் நேற்று இணைந்தார். அணியின் தலைமை பயிற்சியாளர் மஹிலா ஜெயவர்த்தனே, மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் பும்ராவை உற்சாகத்துடன் வரவேற்றனர். 

முதல் முறையாக பாட்காஸ்டில் ஓய்வு குறித்து பேசிய தோனி; 2026ல் ஓய்வா? 10 மாதங்களில் முடிவு!
 

34
RCB vs MI Match, IPL

இதனைத் தொடர்ந்து ஜஸ்பிரித் பும்ரா அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார். மீண்டும் அதே வேகத்துடன் பவுலிங் செய்த பும்ரா, தனது டிரேட் மார்க் யார்க்கர் மூலம் பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கினார். இதன்மூலம பும்ராவின் உடற்தகுதி மீண்டும் களத்தில் விளையாடும் அளவுக்கு உறுதியாக உள்ளது தெரிகிறது. ஆனால் இன்றைய ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா விளையாடுவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.

ஏனெனில் நேற்று பும்ரா பவுலிங் பயிற்சி செய்த நிலையில், அவர் முழுமையாக விளையாடும் நிலையில் இருக்கிறாரா? என்பதை அணியின் பிசியோ உறுதி செய்வார்கள். அவர்கள் ஓகே சொல்லி விட்டால் பும்ரா இன்றைய ஆட்டத்தில் விளையாடுவார். ஆனாலும் இன்றைய ஆட்டத்தில் மட்டும் ஓய்வு கொடுத்து விட்டு அடுத்த ஆட்டம் முதல் அவரை விளையாட வைக்க மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

44
IPL 2025, Sports News Tamil

எனினும் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் பும்ரா விளையாடுவாரா? மாட்டாரா? என்பது இன்றைய போட்டி தொடங்கும் முன்பு தான் தெரியவரும். தொடர் தோல்விகளை சந்தித்து வரும் மும்பை அணிக்கு பும்ராவின் வருகை பெரும் பலமாக அமைந்துள்ளது. ஏற்கெனவே டிரன்ட் போல்ட், தீபக் சாஹர் பவுலிங் யூனிட்டில் இருக்கும் நிலையில், பும்ராவுடன் சேர்த்து பவுலிங் யூனிட் கூடுதல் பலம் பெறுகிறது. 

பும்ராவின் வருகை குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மஹிலா ஜெயவர்தனே, ''பும்ரா இன்று (அதாவது நேற்று) பந்துவீசி பயிற்சியில் ஈடுபட்டார். எங்களின் பிசியோக்கள் அவரது உடல்நிலையை கண்காணிப்பார்கள். எல்லாம் நன்றாக இருக்கிறது. அவர் அணியில் இணைந்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அவர் கொண்டு வரும் அனுபவம் அணிக்கு மிகப்பெரும் பலமாக இருக்கும்'' என்றார்.

தோனியை காட்டி ரசிகர்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் சிஎஸ்கே? வியாபார யுக்தி இதுதான்!
 

Read more Photos on
click me!

Recommended Stories