CSK Fans trolling Dhoni and Vijay Shankar: ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 6 விக்கெட் இழந்து 183 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல் 51 பந்தில் 77 ரன்கள் விளாசினார். பின்பு பேட்டிங் செய்த சிஎஸ்கே 20 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
CSK vs DC, IPL
இந்த போட்டியில் சிஎஸ்கேவின் பவுலிங் அட்டகாசமாக இருந்த நிலையில், பேட்டிங்கில் சொதப்பியதால் மோசமான ஹாட்ரிக் தோல்விக்கு காரணமாகி விட்டது. அதுவும் இறுதிவரை களத்தில் இருந்த விஜய் சங்கரும், மகேந்திர சிங் தோனியும் டெல்லி அணியை வெற்றி பெற வைத்தனர் என்றே கூறலாம். 54 பந்துகளை சந்தித்த விஜய் சங்கர் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 69 ரன்கள் எடுத்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 127 மட்டுமே.
தொடக்கத்தில் இருந்தே களத்தில் இருந்த விஜய் சங்கர் ஒரு கேட்ச், ஒரு எல்பிடபிள்யூ, ரன் அவுட் என 5 முறை கண்டத்தில் இருந்து தப்பி பிழைத்தார். ஆனாலும் அவர் அதிரடியாக விளையாட முயற்சி செய்யவில்லை. ஒருமுறை கூட பவுண்டரிகள், சிக்சர்கள் அடிக்க முயற்சி செய்யவில்லை. உண்மையை சொல்ல போனால் அவரிடம் பெரிய ஷாட்கள் அடிக்கக் கூடிய திறன் இல்லை என்பதே உண்மை.
தோனி இருந்தும் ஜெயிக்க முடியவில்லை - 25 ரன்களில் சிஎஸ்கே தோல்வி; 15 ஆண்டுகளுக்கு பிறகு DC வெற்றி!
MS Dhoni, Cricket
மறுபக்கம் பல போட்டிகளில் சிஎஸ்கேவை தனியாக வெற்றி பெற வைத்த தோனி, நேற்று கொஞ்சம் கூட வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகம் இல்லாமல் ஆடினார். 11வது ஓவரில் களம் இறங்கிய தோனி, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தாலும் 26 பந்தில் 1 பவுண்டரி, 1 சிக்சருடன் 30 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது ஸ்டிரைக் ரேட் வெறும் 115 மட்டுமே. தோனி மற்றும் விஜய் சங்கரின் ஆட்டத்தை பார்த்து சிஎஸ்கே ரசிகர்கள் முழுமையாக வெறுப்படைந்தனர்.
இப்போது ஓடிஐ போட்டிகளிலேயே 100 ஸ்டிரைக் ரேட்டில் வீரர்கள் விளையாடுவது கிடையாது. 140 அல்லது 150 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடினால் தான் அணியில் நீடித்திருக்க முடிகிறது. ஆனால் டி20 போட்டிகளில் தோனியும், விஜய் சங்கரும் 120 ஸ்டிரைக் ரேட்டுக்கு மேல் விளையாடாதது ரசிகர்களை கோபமடையச் செய்துள்ளது. தயவு செய்து இனிமேல் இவரை அணியில் சேர்க்காதீர்கள் என விஜய் சங்கரை ட்ரோல் செய்யும் ரசிகர்கள் ''தோனி சிஎஸ்கேவின் ஜாம்பவான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இப்போது தோனி ஓய்வு பெற நேரம் வந்து விட்டது'' என்று கருத்துகளை கூறி வருகின்றனர்.
CSK, Sports News Tamil
இப்படி சிஎஸ்கே மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் தோனிக்கும், விஜய் சங்கருக்கும் ஆதரவாக பேசியிருப்பது ரசிகர்களின் கோபத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. ''நேற்றைய போட்டி முடிந்த பிறகு பேசிய ருத்ராஜ் கெய்க்வாட், ''இன்று மட்டுமல்ல கடைசி 3 போட்டிகளிலும் நாங்கள் எதிர்பார்த்த மாதிரி செல்லவில்லை. பவர்பிளேயில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டும் எங்களுக்கு பெரும் கவலையாக உள்ளது. இந்த தவறுகளை இரண்டாவது ஆட்டத்தில் அறிந்து அதை நிவர்த்தி செய்ய முயற்சித்தபோதும் எங்களால் முடியவில்லை'' என்றார்.
தோனியும், விஜய் சங்கரும் மிகவும் மெதுவான இன்னிங்ஸ் ஆடியது குறித்து பேசிய ருத்ராஜ் கெய்க்வாட், ''எங்களிடம் 8வது இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் இருக்கிறார். ஓவர்டன் பிளேயிங் லெவனில் இல்லை. ஆகவே போட்டியை கடைசிவரை கொண்டு செல்வதே எங்களின் திட்டமாக இருந்தது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர்கள் நன்றாக பந்துவீசியதால் வேகமாக ரன் சேர்க்க முடியவில்லை. ஷிவம் துபே பேட்டிங் செய்யும்போது கூட அதிவேகமாக ரன்கள் நினைத்தோம். ஆனால் முடியவில்லை'' என்றார்.
ஜோஃப்ரா ஆர்ச்சர், சந்தீப் சர்மாவின் வேகத்தில் சரண்டரான பஞ்சாப் கிங்ஸ் – ராஜஸ்தானுக்கு 2ஆவது வெற்றி!