
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ்
MS Dhoni Talks About IPL Retirement in Podcast debut : ஐபிஎல் 2025 தொடரில் எம்.எஸ். தோனி (MS Dhoni) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இதன் காரணமாக தோனி ஓய்வு பெறப்போவதாக (MS Dhoni Retirement) செய்திகள் பரவி வருகின்றன. ஏமாற்றம் மற்றும் கோபமடைந்த சிஎஸ்கே ரசிகர்கள் தோனி ஓய்வு பெற வேண்டும் என்றும், இளம் வீரருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் விமர்சனங்களை முன் வைத்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேபிடல்ஸ்
டெல்லி கேபிடல்ஸ் (CSK vs DC IPL 2025) அணிக்கு எதிரான போட்டியின்போதே தோனி ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. கடந்த சில நாட்களாக தோனி ஓய்வு குறித்து பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இத்தனை நாட்களாக மௌனம் காத்து வந்த தோனி, தற்போது முதல் முறையாக தனது ஓய்வு குறித்து பேசியுள்ளார். தொடர் விமர்சனங்களுக்கு மத்தியில் தோனி தனது ஐபிஎல் எதிர்காலம் (MS Dhoni IPL Future) குறித்து பேசியுள்ளார்.
ஓய்வு குறித்து தோனி பேச்சு (MS Dhoni Talk About His Retirement)
எம்.எஸ். தோனி முதல் முறையாக ஒரு பாட்காஸ்டில் (MS Dhoni Podcast Debut) தோன்றியுள்ளார். ராஜ் ஷமானி பாட்காஸ்டில் (Raj Shamani Podcast) தோனி தனது ஓய்வு மற்றும் விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார். நான் 18வது ஐபிஎல் சீசனில் விளையாடி வருகிறேன். எனக்கு வயது 43. இந்த ஐபிஎல் முடியும் போது, அதாவது ஜூலை மாதத்தில் எனக்கு 44 வயதாகிவிடும். அதன் பிறகு எனக்கு 10 மாதங்கள் உள்ளன. இந்த நேரத்தில் அடுத்த ஐபிஎல் விளையாட வேண்டுமா? வேண்டாமா என்பதை முடிவு செய்வேன் என்று தோனி கூறியுள்ளார்.
2026 ஐபிஎல் குறித்து அடுத்த 10 மாதங்களில் முடிவு செய்வேன்:
வருடத்தில் ஒரு முறை ஐபிஎல் விளையாடுகிறேன். ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே இந்த முறை ஐபிஎல்-இல் பங்கேற்க வேண்டுமா என்பதை முடிவு செய்கிறேன். இதுவரை இந்த கேள்விக்கு பதில் கண்டுபிடித்து ஐபிஎல் விளையாடி இருக்கிறேன். 2025 ஐபிஎல் தொடரில் விளையாட முடிவு செய்து பங்கேற்றுள்ளேன். 2026 ஐபிஎல் குறித்து அடுத்த 10 மாதங்களில் முடிவு செய்வேன் என்று தோனி கூறியுள்ளார்.
18வது சீசன் சந்தேகம் குறித்து தோனி பதில்
ஓய்வு பெறுகிறார் என்ற வதந்திக்கு தோனி தெளிவான பதில் அளித்துள்ளார். இந்த முறை 18வது ஐபிஎல் சீசனில் தோனி ஓய்வு பெறவில்லை என்பது தெளிவாகிறது. அதுமட்டுமின்றி தோனி பாதியில் விலக மாட்டார் என்பதும் உறுதியாகியுள்ளது.
உடற்தகுதி பதில் அளிக்கும்
நான் விளையாட வேண்டுமா, வேண்டாமா என்பதை உடற்தகுதி தீர்மானிக்கும். அடுத்த 10 மாதங்களில் நான் எந்த அளவுக்கு உடற்தகுதியுடன் இருக்கிறேன், எந்த அளவுக்கு விளையாட முடியும் என்பதைப் பொறுத்து அடுத்த ஐபிஎல் தொடர் முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார். இதன் மூலம் தோனி 2025 ஐபிஎல் தொடரில் ஓய்வு இல்லை என்பதை மறைமுகமாக கூறியுள்ளார்.
ஐபிஎல் 2025 தோனி விக்கெட் கீப்பிங்:
இந்த முறை ஐபிஎல் தொடரில் தோனியின் விக்கெட் கீப்பிங்கில் எந்த மாற்றமும் இல்லை. அதே மின்னல் வேகம், அதே பாணி, அதே கம்பீரம் இன்னும் உள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் ஸ்டம்பிங் செய்யும் தோனியின் திறமை இன்னும் அப்படியே உள்ளது. ஆனால் பேட்டிங்கில் தோனி முன்பு போல் இல்லை. ஒன்றிரண்டு சிக்ஸர்கள் அடித்தாலும் அணியை கரை சேர்க்கும் வகையில் இல்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஐபிஎல் 2025ல் தோனியின் பேட்டிங் பங்களிப்பு:
மும்பைக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடைபெற்ற 3ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் தோனி ரன்கள் எடுக்கவில்லை. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற 8ஆவது லீக் போட்டியில் சிஎஸ்கே 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்தப் போட்டியில் 16 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரி உள்பட 30 ரன்கள் எடுத்தார். கவுகாத்தியில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 11 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 16 ரன்கள் எடுத்தார். கடைசியாக சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வென்றது.
இந்த போட்டியில் தோனி ஏன் விளையாட வேண்டும், அவருக்கு ஓய்வு அளிக்க வேண்டும், இளம் வீரருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
புள்ளிகள் பட்டியலில் 9வது இடம்
ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3ல் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் புள்ளிகள் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே போலவே ஒரு போட்டியில் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி மற்றும் 10வது இடத்தில் உள்ளது.