Published : Jul 14, 2025, 08:28 AM ISTUpdated : Jul 14, 2025, 08:32 AM IST
148 ஆண்டுகால விம்பிள்டன் டென்னிஸ் வரலாற்றில் இத்தாலி வீரர் சின்னர் புதிய சாதனை படைத்துள்ளார். தனது நாட்டின் நீண்ட நாள் கனவை நனவாக்கி விளையாட்டு உலகில் புதிய சகாப்தத்திற்கு வித்திட்டுள்ளார். அவர் யாரை வீழ்த்தினார் தெரியுமா?
விம்பிள்டன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் உலகத்தரம் வாய்ந்த இரண்டு வீரர்களின் ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே அனல் பறந்தது. இத்தாலிய வீரர் சின்னர் முதல் முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றார். இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் கார்லோஸ் அல்கராஸை (4-6, 6-4,6-4,6-4) வீழ்த்தினார்.
25
சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய சின்னர்
போட்டி விறுவிறுப்பாக தொடங்கியது. சின்னர் 2-4 என முன்னிலை பெற்றாலும், அல்கராஸ் அபாரமாக ஆடி முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார்.
35
அனல் பறந்த இறுதிப்போட்டி
மூன்றாவது செட்டும் விறுவிறுப்பாக தொடங்கியது. இருவரும் சர்வீஸ்களை காப்பாற்ற போராடினர். அல்கராஸ் 2-1 என முன்னிலை பெற்றார். ஆனால், சின்னர் 6-4 என வென்றார்.
சின்னர் அல்கராஸை வீழ்த்தி இத்தாலிக்கு முதல் விம்பிள்டன் பட்டத்தை பெற்றுத்தந்தார். 148 ஆண்டு விம்பிள்டன் வரலாற்றில் இத்தாலி வீரர் ஒருவர் பட்டம் வெல்வது இதுவே முதல் முறை.
55
மகளிர் ஆட்டம்- போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக் சாம்பியன்
மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவை 6-3, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.