Ravindra Jadeja Creates History In World Test Championship
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் நிலையில், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியும் முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஒரு கட்டடத்தில் இக்கட்டான நிலையில் இருந்த இந்திய அணியை ரவீந்திர ஜடேஜா தனது சூப்பரான அரை சதத்தின் மூலம் மீட்டார்.
24
ஜடேஜா வரலாற்று சாதனை
ஜடேஜா 131 பந்துகளில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் 72 ரன்கள் எடுத்தார். பொறுப்பான பேட்டிங்கால் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்ட ஜடேஜா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) வரலாற்றில் பெரும் சாதனையைப் படைத்துள்ளார். அதாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 2000 ரன்களுக்கு மேல் எடுத்து 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
உலகின் நம்பர் 1 வீரர்
3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் WTC-ல் 2000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். ஏற்கனவே 100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியிருந்த ஜடேஜா, இந்த இரண்டு சாதனைகளையும் எட்டிய உலகின் நம்பர் 1 வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். வேகத்துக்கு உகந்த இங்கிலாந்து ஆடுகளங்களில் ஜடேஜாவால் விக்கெட் வீழ்த்த முடியாவிட்டாலும் ரன்கள் மூலம் தனது கணிசமான பங்களிப்பை செய்து வருகிறார்.
2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் 89 ரனகள், 2வது இன்னிங்சில் 69 ரன்கள் நாட் அவுட் என இரண்டு இன்னிங்சிலும் அரை சதம் விளாசிய அவர் இப்போது 3வது டெஸ்ட்டிலும் பேட்டிங்கில் ஜொலித்துள்ளார்.
34
இங்கிலாந்தில் 8 அரை சதங்கள்
2வது இன்னிங்சில் அரை சதம் அடித்த ஜடேஜா மற்றொரு சாதனையையும் பதிவு செய்துள்ளார். அதாவது இங்கிலாந்தில் 8வது அரைசதத்தை பூர்த்தி செய்த அவர் கே.எல். ராகுல் மற்றும் சேதேஷ்வர் புஜாராவையும் முந்தியுள்ளார். கோலி மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகியோர் சாதனையை (இங்கிலாந்தில் 8 அரை சதங்கள்) சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில் கே.எல். ராகுல் மற்றும் சேதேஷ்வர் புஜாரா போன்ற இருவரும் இங்கிலாந்தில் ஆறு ஐம்பதுக்கும் மேற்பட்ட அரைசதங்களை அடித்துள்ளனர்.
ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர் மற்றும் குண்டப்பா விஸ்வநாத் ஆகியோர் 10க்கும் மேற்பட்ட அரைசதங்கள் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளனர். சச்சின் டெண்டுல்கர் இங்கிலாந்தில் 12 அரை சதங்கள் அடித்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை 41 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா, 3 சதங்கள் மற்றும் 13 அரைசதங்கள் உட்பட 2010 ரன்களைக் குவித்துள்ளார்.
மேலும் 132 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உலகின் நம்பர் 1 ஆல்ரவுண்டராக வலம் வருகிறார். ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் 1152 நாட்களுக்கு மேல் ஜடேஜா முதலிடத்தில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.