IPL: RCB beat CSK: ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோதின. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் தங்கள் அணி முதலில் பவுலிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 196 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் பில் சால்ட் 16 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 32 ரன்கள் எடுத்தார்.
CSK vs RCB, IPL
கேப்டன் ரஜத் படிதார் 32 பந்தில் 51 ரன்கள் விளாசினார். கடைசி கட்டத்தில் டிம் டேவிட் 8 பந்துகளில் 22 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோர் 190 ரன்களை கடக்க உதவினார். பின்பு 197 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் ஜோஸ் ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் பந்துகளை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை தாரை வார்த்தனர். தொடக்க வீரர் ராகுல் திரிபாதி வெறும் 5 ரன்னில் ஹேசில்வுட்டின் பவுன்ஸ் பந்தில் வீழ்ந்தார்.
கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் ரன் ஏதும் எடுக்காமல் ஹேசில்வுட் பந்தில் கேட்ச் ஆனார். தீபக் ஹுடாவும் வெறும் 4 ரன்னில் புவனேஷ்வர்குமார் பந்தில் வீழ்ந்தார். இதனைத் தொடர்ந்து சாம் கரண் 8 ரன்னில் லிவிங்ஸ்டன் பந்தில் கேட்ச் ஆனார். இதன்பிறகு அதிரடி மன்னன் ஷிவம் துபே (19 ரன்), ஓரளவு சிறப்பாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா (31 பந்தில் 41 ரன்) ஆகியோர் யாஷ் தயாளின் ஒரே ஓவரில் கிளீன் போல்டானார்கள்.
CSK vs RCB: மீண்டும் மின்னல் வேக ஸ்டெம்பிங் செய்த தோனி! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்!
CSK vs RCB, sports news tamil
சிஎஸ்கே வீரர்கள் ஒருவர் கூட நிலைத்து நின்று விளையாடவில்லை. களத்துக்கு வருவதும் அவுட்டாகி உள்ளே செல்வதுமாக இருந்தனர். ரவீந்திர ஜடேஜா 19 பந்தில் 25 ரன் எடுத்து அவுட் ஆனார். கடைசி கட்டத்தில் மகேந்திர சிங் தோனி வெறும் 16 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 30 ரன்கள் எடுத்து நாட் அவுட் ஆக திகழந்தார். 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 8 விக்கெட் இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது.
IPL 2025, RCB, CSK
ஆர்சிபி தரப்பில் ஜோஸ் ஹேசில்வுட் 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். யாஷ் தயாள், லியோம் லிவிங்ஸ்டன் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆர்சிபி அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடைசியாக கடந்த 2008ம் ஆண்டு வெற்றி பெற்றிருந்தது. அதன்பிறகு ஆண்டுதோறும் சென்னையில் ஆர்சிபி தோல்வியை சந்தித்து இருந்தது. இப்போது சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு அந்த சோக கதைக்கு ஆர்சிபி முடிவு கட்டியுள்ளது.
சிஎஸ்கேவுக்கு இந்த வீரர் தேவையே இல்லை! ருத்ராஜ் எடுத்த தவறான முடிவை விளாசும் ரசிகர்கள்!