IPL: ரசிகருக்கு பணம் கொடுத்து காலில் விழ வைத்தாரா ரியான் பராக்? புதிய சர்ச்சை!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் ரசிகருக்கு பணம் கொடுத்து காலில் விழ வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து விரிவாக பார்ப்போம்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் ரசிகருக்கு பணம் கொடுத்து காலில் விழ வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து விரிவாக பார்ப்போம்.
Riyan Parag paid to Fan for Foot-Touching Stunt: ஐபிஎல்லில் நேற்று முன்தினம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 151 ரன்கள் எடுத்தது. பின்பு பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 2 விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயலஸ் அணி கேப்டன் ரியான் பராக் பவுலிங் செய்து கொண்டிருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் திடீரென மைதானத்துக்குள் புகுந்து ரியான் பராக்கின் காலில் விழுந்து வணங்கினார். இதனால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. மைதான பாதுகாப்பு ஊழியர்கள் அந்த ரசிகரை அங்கு இருந்து வெளியேற்றினார்கள்.
இந்நிலையில், ரியான் பராக் தான் அந்த ரசிகருக்கு பணம் கொடுத்து காலில் விழச் சொன்னாதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது மைதானத்திற்கு வந்து ரியான் பராக் காலில் விழுந்த இளைஞருக்கு ரூ.10,000 பணம் முன்பே கொடுக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பலர் கருத்துகளை கூறி வருகின்றனர். கடந்த சனிக்கிழமை ஈடன் கார்டன்ஸில் (Eden Gardens) நடந்த ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணியும், கொல்கத்தா அணியும் மோதின.
CSK vs RCB பிளேயிங் 11ல் யார் இன் யாரு அவுட்? போட்டியில் அனல் பறக்க போகுது; ரெடியா இருங்க!
அந்த போட்டியில் மைதானத்துக்குள் நுழைந்த ரசிகர் ஒருவர் விராட் கோலி (Virat Kohli) காலில் விழுந்து வணங்கினார். அந்த சம்பவத்தைப் பார்த்த பிறகு, ரியான் பராக் தனது விளம்பரத்திற்காக பணம் கொடுத்து ஒரு இளைஞரை வைத்து இப்படி செய்ததாக பலர் கூறுகின்றனர். ஏனெனில் ரியான் பராக் விராட் கோலி, தோனி போன்று பெரிய வீரர் கிடையாது. மிக இளம் வயதுடைய அவர் காலில் விரும்பி வந்து விழும் அளவுக்கு ரசிகர்கள் யாரும் கிடையாது. அப்படி இருக்கும்போது இது பராக்கின் செட்டிங் தான் என பலரும் கருத்துகளை கூறி வருகின்றனர்.
ஆனால் அந்த இளைஞர் தானாகவே மைதானத்திற்கு வந்து பராக் காலில் விழுந்தார் என ஒரு சிலர் வாதிடுகின்றனர். ரியான் பராக்கின் சொந்த ஊர் கௌஹாத்தி ஆகும். அதன் காரணமாகவே பல அஸ்ஸாம் கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல்-இல் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு ஆதரவு தருகிறார்கள். இந்த ஐபிஎல்-இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இரண்டாவது ஹோம் கிரவுண்ட் பார்சபாரா கிரிக்கெட் மைதானம். புதன்கிழமை இந்த மைதானத்தில் ஐபிஎல் முதல் போட்டி நடந்தது. இந்த போட்டியில் ராஜஸ்தானுக்கு பராக் கேப்டனாக இருந்தார். அவர் டாஸ் போட சென்றதும் உள்ளூர் கிரிக்கெட் ரசிகர்கள் சந்தோஷப்பட்டனர். ஆவராரத்துடன் கூச்சலிட்டனர். ரசிகர்களுக்கு பராக் வணக்கம் தெரிவித்தார்.
அழகிய லைலா! இணையத்தில் வைரலாகும் காவ்யா மாறன்: ஏன் தெரியுமா? IPL & Ghibli Art