ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உடனான போட்டிக்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், போட்டி மற்றும் விராட் கோலிக்கு எதிராக விளையாடுவது குறித்து தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். "RCB க்கு எதிராக விளையாட ஆவலுடன் இருக்கிறேன், குறிப்பாக ரஜத் படிதார் புதிய கேப்டனாக இருக்கிறார். ரஜத்தை கேப்டனாக அறிவித்த உடனேயே, நான் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். நாங்கள் நீண்ட காலமாக நண்பர்களாக இருக்கிறோம், நாங்கள் ஒருவரை ஒருவர் நன்றாக அறிவோம். RCB வலுவான அணிகளில் ஒன்றாகும். அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நன்றாக விளையாடி வருகிறார்கள்.
Virat Kohli and MS Dhoni
விராட் கோலி எதிரணியில் இருக்கும்போது, அவர் விளையாடும்போது, அது எப்போதும் பார்க்க வேண்டிய போட்டியாக இருக்கும். அவர் நீண்ட காலமாக, தொடர்ந்து RCBக்காகவும் நாட்டிற்காகவும் விளையாடி வருகிறார். எனவே, இது எப்போதும் ஒரு சிறந்த போட்டி. மும்பை இந்தியன்ஸ் அணிக்குப் பிறகு, இது இரண்டாவது போட்டி. நாங்கள் எப்போதும் ஆவலுடன் காத்திருக்கிறோம்." என்று ருதுராஜ் கெய்க்வாட் ஜியோ ஸ்டாரிடம் கூறினார்.
Virat Kohli, Royal Challengers Bengaluru
CSK தனது 2ஆவது ஐபிஎல் 2025 போட்டியில் மார்ச் 28ஆம் தேதி இன்று எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் RCB க்கு எதிராக விளையாடுகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான சீசனின் ஆரம்ப போட்டியில் RCB ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் குர்ணல் பாண்டியா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். விராட் கோலி அபாரமாக விளையாடி 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
CSK Squads 2025
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்:
ருதுராஜ் கெய்க்வாட் (c), எம்.எஸ். தோனி (wk), ராகுல் திரிபாதி, வான்ஷ் பேடி, ஆண்ட்ரே சித்தார்த், ஷேக் ரஷீத், டெவோன் கான்வே, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, ரச்சின் ரவீந்திர, ஆர். அஸ்வின், தீபக் ஹூடா, ஜேமி ஓவர்டன், விஜய் சங்கர், சாம் குர்ரான். ராமகிருஷ்ணா கோஷ், மதீஷா பத்திரனா, கலீல் அகமது, முகேஷ் சவுத்ரி, நாதன் எல்லிஸ், குர்ஜாப்னீத் சிங், அன்ஷுல் கம்போஜ், கம்லேஷ் நாகர்கோட்டி, ஸ்ரேயாஸ் கோபால், நூர் அகமது.
RCB Squads 2025
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர்கள்:
ரஜத் படிதார் (c), விராட் கோலி, யாஷ் தயாள், ஜோஷ் ஹேசல்வுட், பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டோன், ராசிக் தார், சுயாஷ் சர்மா, குருணல் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரோமாரியோ ஷெப்பர்ட், நுவன் துஷாரா, மனோஜ் பண்டேஜ், ஜேக்கப் பெத்தேல், தேவ்தத் படிக்கல், மோஹித் ரதி, ஸ்வஸ்திக் சிகாரா, லுங்கி என்கிடி, அபிநந்தன் சிங்.