ஆர்சிபிக்கு எதிராக களமிறங்குவாரா சிஎஸ்கேவின் யார்க்கர் கிங் பதிரானா?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளரான பதிரானா, ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா... மாட்டாரா என்பது குறித்த அப்டேட் வந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளரான பதிரானா, ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா... மாட்டாரா என்பது குறித்த அப்டேட் வந்துள்ளது.
Pathirana Bengaluru match: Doubtful! ஐபிஎல் தொடரின் 18வது சீசன் கடந்த மார்ச் 22ந் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது முதல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டி கடந்த மார்ச் 23-ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணி இந்த சீசனில் தங்கள் முதல் வெற்றியை பதிவு செய்தது.
ஆர்சிபி உடன் சிஎஸ்கே மோதல்
மும்பை இந்தியன்ஸை வீழ்த்திய தெம்போடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்ததாக ராஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபி அணி உடன் பலப்பரிட்சை நடத்த உள்ளது. இப்போட்டி இன்று (மார்ச் 28) மாலை 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இரு அணிகளுமே இந்த சீசனில் தங்கள் முதல் லீக் ஆட்டத்தில் வெற்றிபெற்றுள்ளதால், இரண்டாவது வெற்றியை ருசிக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதையும் படியுங்கள்... CSK vs RCB – யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்? சாதிக்குமா ரஜத் படிதார் அண்ட் கோ?
பதிரானா காயம்
சென்னை அணியை பொறுத்தவரை ஸ்பின் பவுலிங்கில் ஸ்ட்ராங் ஆக இருந்தாலும் பாஸ்ட் பவுலிங்கில் சற்று வீக் ஆக உள்ளது. அதற்கு முக்கிய காரணம் பதிரனா தான். சென்னை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக திகழ்ந்து வரும் பதிரானா, காயம் காரணாமாக முதல் போட்டியில் பங்கேற்கவில்லை. இதனிடையே அவர் காயத்தில் இருந்து மீண்டு வருவதாக தகவல் வெளியானதால் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் பதிரானாவிளையாடுவாரா என்கிற கேள்வியும் எழுந்து வந்தது.
ஆர்சிபிக்கு எதிராக பதிரானா விளையாடுவாரா?
பதிரானாவின் பிட்னஸ் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி பதிரானா வேகமாக காயத்தில் இருந்து குணமாகி வருவதாக கூறினார். இதனால் ஆர்சிபிக்கு எதிரான போட்டியிலும் அவர் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. சேப்பாக்கம் மைதானம் ஸ்பின்னுக்கு சாதகமாக இருப்பதால் சென்னை அணி பவுலிங்கில் சொதப்பாமல் தப்பித்து வருகிறது. விரைவில் அவர் குணமடைந்து வந்தால் தான் சென்னை அணியின் பந்துவீச்சு பலம்பெறும்.
இதையும் படியுங்கள்... 17 வருஷமா நாங்க தான்டா கிங்! RCBக்கு எதிராக சேபாக்கம் மைதானத்தில் கெத்து காட்டும் CSK