CSK vs RCB – யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்? சாதிக்குமா ரஜத் படிதார் அண்ட் கோ?

Published : Mar 28, 2025, 10:27 AM IST

CSK vs RCB Head to Head Records in Tamil : சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025 தொடரின் 8ஆவது லீக் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில், இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணிகள் என்பதால் வெற்றி வாய்ப்பு யாருக்கு இருக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.

PREV
17
CSK vs RCB – யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்? சாதிக்குமா ரஜத் படிதார் அண்ட் கோ?

CSK vs RCB Head to Head Records in Tamil : ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 18ஆவது சீசனின் முதல் போட்டியிலேயே கேகேஆர் அணிக்கு எதிராக ஆர்சிபி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஆர்சிபியின் வெற்றிக்கு பவுலிங் மற்றும் பேட்டிங் இரண்டும் காரணமாக சொல்லப்ப்பட்டது. அதோடு, அனுபவம் இல்லாத கேப்டனாக இருந்தாலும் ரஜத் படிதார் தனது முதல் போட்டியிலேயே அணிக்கு வெற்றி தேடி கொடுத்தார் என்று அவருக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்தது.

27
CSK vs RCB Head to Head Records, MA Chidambaram Stadium Stats in Tamil

ஆனால், இன்று அதே போன்று வெற்றியை தக்க வைத்துக் கொள்வாரா என்பது தான் ரஜத் படிதாருக்கு சவாலான ஒன்று. ஏனென்றால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோட்டையான சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ஒட்டுமொத்த மைதானத்தையும் தனது கண்ட்ரோலில் வைத்திருக்கும் அனுபவமும், புத்திக் கூர்மையும் கொண்ட தோனி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் கொண்ட சிஎஸ்கே அணியை ஆர்சிபி எதிர்கொள்கிறது.

37
CSK vs RCB Head to Head Records, MA Chidambaram Stadium Stats in Tamil

சிஎஸ்கே – ஆர்சிபி நேருக்கு நேர்:

இதுவரையில் இரு அணிகளும் தலா 33 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் சிஎஸ்கே தான் 21 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆர்சிபி 11 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை.

47
CSK vs RCB Head to Head Records, MA Chidambaram Stadium Stats in Tamil

சிஎஸ்கே – ஆர்சிபி எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியம்:

சென்னை எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி இரு அணிகளும் தலா 9 முறை மோதியுள்ளன. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் தான் 8 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆர்சிபி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. அதுவும் கடந்த ஆண்டு நடந்த பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் போட்டியில் ஆர்சிபி 27 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றது. ஆனால், எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தானிடம் தோற்று வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

57
CSK vs RCB Head to Head Records, MA Chidambaram Stadium Stats in Tamil

கடந்த ஆண்டு அடைந்த தோல்விக்கு இந்த ஆண்டில் சிஎஸ்கே பழி தீர்த்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு ஆர்சிபி கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்காது என்று தெரிகிறது. ஏனென்றால், ஆர்சிபியின் ஓபனிங் ஜோடியான பில் சால்ட், விராட் கோலி இருவரும் முதல் போட்டியில் அரைசதம் அடித்தனர். ரஜத் படிதார், லியாம் லிவிங்ஸ்டன், ஜித்தேஷ் சர்மா, டிம் டேவிட், குர்ணல் பாண்டியா என்று பேட்டிங் வரிசை பலம் வாய்ந்ததாக இருக்கிறது.

67
CSK vs RCB Head to Head Records, MA Chidambaram Stadium Stats in Tamil

பவுலிங்கிலும் குறையில்லை. சுழல் ஜாம்பவான் குர்ணல் பாண்டியா ஒருவரே போதும். முதல் போட்டியில் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமே இவர் தான். 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்கு மாறாக சிஎஸ்கேயில் நூர் அகமது, ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் என்று கிளாசிக்கலான சுழல் சக்கவர்த்திகள் இடம் பெற்றிருக்கிறார்கள்.

77
CSK vs RCB Head to Head Records, MA Chidambaram Stadium Stats in Tamil

இரு அணிகளுமே ஒன்னுக்கொன்னு சலித்தது இல்லை. எல்லோருடைய எதிர்பார்ப்பும் சிஎஸ்கே மீதே இருக்கும். ஆர்சிபியில் கோலி எப்படி விளையாடுகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஒவ்வொருவரும் ஆவலாக இருப்பார்கள். எப்படியும் இந்த முறை ஆர்சிபி டிராபி வென்றே தீர வேண்டும் என்ற குறிக்கோளோடு களமிறங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

17 வருஷமா நாங்க தான்டா கிங்! RCBக்கு எதிராக சேபாக்கம் மைதானத்தில் கெத்து காட்டும் CSK
 

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories