கைக்கு வந்த கேட்ச்களை விட்ட சிஎஸ்கே வீரர்கள்! ஆர்சிபி அணி இமாலய ரன்கள் குவிப்பு!
ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி அணி 196 ரன்கள் குவித்துள்ளது. சிஎஸ்கே அணியின் பீல்டிங் படுமோசமாக இருந்தது.
ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி அணி 196 ரன்கள் குவித்துள்ளது. சிஎஸ்கே அணியின் பீல்டிங் படுமோசமாக இருந்தது.
IPL: RCB VS CSK Match: ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் தங்கள் அணி முதலில் பவுலிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சாலட், விராட் கோலி களமிறங்கினார்கள். பில் சால்ட் தொடக்கம் முதலே சிக்சரும், பவுண்டரியுமாக விளாசினார். அஸ்வினின் ஒரே ஓவரில் 2 பவுண்டரி, 1 சிக்சர் விளாசிய பில் சால்ட் , கலீல் அகமது பந்தையும் விளாசினார். ஸ்கோர் 4 ஓவர்களில் 37 ரன்களாக உயர்ந்த நிலையில், 5வது ஓவரை நூர் அகமது வீச வந்தார்.
இந்த ஓவரின் கடைசி பந்தில் பில் சால்ட் அடிக்க முயன்றபோது பந்தை மிஸ் செய்தார். இதனால் பந்து விக்கெட் கீப்பர் தோனியின் கைக்கு சென்றபோது அவர் மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் செய்தார். ரீப்ளையில் பார்த்தபோது பில் சால்ட் காலை கிரீஸை விட்டு தூக்கியது தெரியவந்தது. இதனால் அம்பயர் சால்ட் அவுட் என அறிவித்தார். அதிரடியாக விளையாடிய பில் சால்ட் 16 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 32 ரன்கள் எடுத்தார்.
CSK vs RCB: மீண்டும் மின்னல் வேக ஸ்டெம்பிங் செய்த தோனி! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்!
அதே வேளையில் விராட் கோலி ரன்கள் அடிகக் சிரமப்பட்டார். பதிரனா ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய விராட் கோலி 30 பந்தில் 31 ரன் எடுத்து நூர் அகமது பந்தில் கேட்ச் ஆனார். மறுமுனையில் பந்துகளை எல்லைக்கோட்டு பறக்கவிட்ட தேவ்தத் படிக்கல் 14 பந்தில் 27 ரன்கள் ரன்கள் எடுத்து அஸ்வின் பந்தில் ருத்ராஜ் கெய்க்வாட்டிடம் கேட்ச் ஆனார். இதேபோல் அதிரடி வீரர் லியோம் லிவிங்ஸ்டன் 10 ரன்னில் நூர் அகமது பந்தில் கிளீன் போல்டானார்.
ஒருபக்கம் விக்கெட் சரிந்தாலும் மறுபக்கம் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் மிகச்சிறப்பாக விளையாடினார். ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொண்ட அவர் ஜடேஜாவின் ஓவரில் சில சிக்சர்களை விளாசினார். அவர் கொடுத்த எளிதான இரண்டு கேட்ச் வாய்ப்புகளை தீபக் ஹூடா, கலீல் அகமது ஆகியோர் தவற விட்டனர். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரஜத் படிதார் தொடர்ந்து சிஎஸ்கே பவுலர்களை விளாசி 30 பந்துகளில் அரை சதம் அடித்தார்.
அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்த ஜிதேஷ் சர்மா 6 பந்தில் 12 ரன் எடுத்து கேட்ச் ஆனார். இதனைத் தொடர்ந்து அரை சதம் (51 ரன்) அடித்த கையோடு ரஜத் படிதார் பதிரனா பந்தில் கேட்ச் ஆனார். தொடர்ந்து குர்னால் பாண்ட்யாவையும் (0) பதிரனா வெளியேற்றினார். சாம் கரணின் கடைசி ஓவரில் டிம் டேவிட் 3 சிக்சர்கள் விளாசியதால் ஆர்சிபி அணி 190 ரன்களை கடந்தது. ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 196 ரன்கள் குவித்தது. 197 என்ற இமாலய இலக்கை நோக்கி சிஎஸ்கே பேட்டிங் செய்கிறது.
IPL: ரசிகருக்கு பணம் கொடுத்து காலில் விழ வைத்தாரா ரியான் பராக்? புதிய சர்ச்சை!