CSK vs PBKS: வேறு வழியில்லை! ஸ்டார் வீரரை நீக்கிய ருத்ராஜ்! சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதோ!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில், சிஎஸ்கேவின் பிளேயிங் லெவன் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில், சிஎஸ்கேவின் பிளேயிங் லெவன் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
CSK playing eleven against Punjab Kings: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பஞ்சாபில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மிகவும் படுமோசமாக விளையாடி வருகிறது. இதுவரை 4 போட்டியில் விளையாடியுள்ள சிஎஸ்கே ஹாட்ரிக் தோல்வி அடைந்து ஒரே ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று 9வது இடத்தில் உள்ளது.
முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியனஸ் உடன் போராடி வெற்றி பெற்ற சிஎஸ்கே, அதனைத் தொடர்ந்து விளையாடிய மூன்று போட்டிகளிலும் படுதோல்வி அடைந்துள்ளது. அதுவும் வெற்றிக்கு கொஞ்சம் கூட முயற்சி செய்யாமல் எதிரணியிடம் சரண் அடைந்தது ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. சிஎஸ்கே பவுலிங் சிறப்பாக இருக்கும் நிலையில், பேட்டிங், பீல்டிங் மிக மோசமாக உள்ளது.
பெரிய சிக்சர்களை அடிக்கக்கூடிய வீரர்கள் இல்லாதது சிஎஸ்கேவுக்கு பெரும் பின்னடைவாகும். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் சிஎஸ்கே உள்ளது. பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே பிளேயிங் வெலனில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இனி மும்பையை ஜெயிக்கிறது கஷ்டம்! பழைய பன்னீர்செல்வமாக வந்த பும்ரா! அதே மிரட்டல் வேகம்!
அதாவது மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக 18 வயதான ஆண்ட்ரே சித்தார்த் இடம்பெற உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அஸ்வினை பொறுத்தவரை 4 போட்டிகளிலும் பவுலிங்கில் பெரிய அளவில் தாக்கத்தை நிகழ்த்தவில்லை. ஜடேஜா, நூர் அகமது என 2 ஸ்பின்னர்கள் இருக்கும் நிலையில், ரச்சின் ரவீந்திராவும் ஸ்பின் போடுவார். ஆகவே அஸ்வின் தேவையில்லை என சிஎஸ்கே நிர்வாகம் கருதுகிறது.
ஆகையால் அவருக்கு பதிலாக பேட்டிங் துறையை வலுப்படுத்தும் வகையில் ஆண்ட்ரே சித்தார்த் பிளேயிங் லெவனில் இடம்பெற உள்ளார். இதுதவிர கடந்த போட்டியில் பவுலிங்கில் சொதப்பிய முகேஷ் சவுத்ரி நீக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக மீடியம் பாஸ்ட் போடுவது மட்டுமின்றி பேட்டிங்கும் செய்யும் அன்ஷுல் காம்போஜ் இடம்பெற இருக்கிறார். பயமின்றி அதிரடியாக விளையாடக்கூடிய இளம் வீரர் தேவை என்பதால் ஆண்ட்ரே சித்தார்த் சேர்க்கப்படுகிறார். மேலும் விஜய் சங்கருக்கு பதிலாக ராகுல் திரிபாதி இடம்பெறலாம் என தகவல்கள் கூறுகின்றன.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ஓப்பனிங்கில் ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே களமிறங்குகிறனர். ருத்ராஜ் கெய்க்வாட் வழக்கம்போல் 3வது இடத்தில் பேட்டிங் செய்கிறார். இதன்பிறகு ராகுல் திரிபாதி அல்லது விஜய் சங்கர், ஷிவம் துபே, ஆண்ட்ரே சித்தார்த், ரவீந்திர ஜடேஜா விளையாட உள்ளனர். கடைசியில் தோனி, பேட்டிங் செய்ய இருக்கிறார். ஸ்பின் பவுலிங்கை பொறுத்தவரை ஜடேஜா, நூர் அகமது, ஷ்ரேயாஸ் கோபால், தேவைப்பட்டால் ரச்சின் ரவீந்திரா உள்ளனர்.
பாஸ்ட் பவுலிங்கை பொறுத்தவரை பதிரனா, கலீல் அகமது, அன்ஷுல் காம்போஜ் பலம் சேர்க்க உள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே பிளேயிங் லெவன்: ருத்ராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே, ராகுல் திரிபாதி அல்லது விஜய் சங்கர், ஆண்ட்ரே சித்தார்த், ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி, அன்ஷுல் காம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது, மதிஷா பதிரனா.
முதல் முறையாக பாட்காஸ்டில் ஓய்வு குறித்து பேசிய தோனி; 2026ல் ஓய்வா? 10 மாதங்களில் முடிவு!