CSK vs DC: சிஎஸ்கேவில் களமிறங்கும் அதிரடி வீரர்! பவர்பிளே தெறிக்க போகுது! பிளேயிங் லெவன்!
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
CSK playing 11 against Delhi Capitals: இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடுமையயாக சொதப்பி வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே, ஆர்சிபி மற்றும் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியது.
சிஎஸ்கே அணியின் பவுலிங் நன்றாக இருந்தாலும், பேட்டிங் மிகவும் மோசமாக இருப்பதால் தோல்விக்கு முக்கிய காரணமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை மோதுகின்றன. டெல்லியை பொறுத்தவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.
அதே வேளையில் சிஎஸ்கே 3 போட்டிகளில் 2ல் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் இருக்கிறது. ஆகவே இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே அணி உள்ளது. டெல்லிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியில் பவேறு மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே அணியில் முக்கிய மாற்றமாக ஒப்பனிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் ராகுல் திரிபாதி நடுவரிசையில் தள்ளப்பட்டு டெவோன் கான்வே ஒப்பனிங்கில் களமிறங்க உள்ளார்.
KKR vs SRH: 120 ரன்னில் சுருண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 'ஹாட்ரிக்' தோல்வி! கேகேஆர் மாஸ்!
டெவான் கான்வேயும், ரச்சின் ரவீந்திராவும் ஓப்பனிங்கில் விளையாட இருக்கின்றனர். கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் வழக்கம்போல் 3வது இடத்தில் களமிறங்குகிறார். இதன்பிறகு ராகுல் திரிபாதி, ஷிவம் துபே, ஜடேஜா மற்றும் தோனி களம் காண்கின்றனர். பவுலிங்கை பொறுத்தவரை கலீல் அகமது மற்றும் மதீஷா பதிரனா இடம்பெறுகின்றனர். ஸ்பின் பவுலிங்கில் நூர் அகமது, அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆதிக்கம் செலுத்த உள்ளனர்.
டெல்லிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: ருத்ராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே, ராகுல் திரிபாதி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி, ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பதிரனா. நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. மற்ற அணிகளை போன்று அதிரடி காட்டக்கூடிய வீரர்கள் இல்லாதது பெரும் குறையாகும்.
இதேபோல் தொடக்கத்தில் விக்கெட் வீழ்ந்தாலும் மிடில் வரிசையில் அணியை தூக்கி நிறுத்தகூடிய வீரர்கள் இல்லை. ராகுல் திரிபாதி மிடில் வரிசையில் களமிறங்கினால் இந்த குறை நிவர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். மேலும் பவர்பிளேயில் மணிக்கு 140 கிமீ வேகத்தில் பந்துவீசக்கூடிய பவுலர்களும் இல்லாதது பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இது எல்லாவற்றையும் விட சிஎஸ்கேவின் பீல்டிங் படுமோசமாக உள்ளது. கடந்த ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டிங்கில் முன்னேற்றம் கண்டிருந்தாலும் எதிர்பார்த்த அளவு சிறப்பாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி காயம் எப்படி இருக்கிறது? அடுத்த போட்டியில் விளையாடுவாரா? முக்கிய அப்டேட்!