IPL: Kolkata Knight Riders beat Sunrisers Hyderabad: ஐபில்லில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அனிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 6 விக்கெட் இழந்து ரன்கள் குவித்தது. கேகேஆர் அணியின் தொடக்கம் மிகவும் மோசமாக இருந்தது. குயின்டன் டி காக் 1 ரன் மட்டுமே எடுத்து பேட் கம்மின்ஸ் பந்தில் கேட்ச் ஆனார். சுனில் நரைன் தொடர்ந்து 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
IPL, KKR VS SRH
பின்பு கேப்டன் அஜிங்க்யா ரஹானே மற்றும் இளம் வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி ஆகியோர் 81 ரன்கள் எடுத்து முக்கியமான பார்ட்னர்ஷிப் மூலம் இன்னிங்ஸை நிலைநிறுத்தினர். ரஹானே 27 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து, நான்கு சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் ஜீஷன் அன்சாரி பந்தில் அவுட் ஆனார்.
மறுமுனையில் சிறப்பாக விளையாடிய அங்கிரிஷ் ரகுவன்ஷி தனது இரண்டாவது அரைசதத்தை பதிவு செய்தார், 32 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர்களுடன் 50 ரன்கள் எடுத்தார். அப்போது கேகேஆர் 106/4 என்ற நிலையில் இருந்தது. இறுதிக்கட்டத்தில் வெங்கடேஷ் ஐயர் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணி 200 ரன்கள் தொட உதவினார்கள். வெங்கடேஷ் ஐயர் 28 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து, SRH அணிக்கு எதிரான தனது மூன்றாவது தொடர்ச்சியான அரைசதத்தை பதிவு செய்தார். இதில் ஏழு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்சர்கள் அடங்கும்.
விராட் கோலி காயம் எப்படி இருக்கிறது? அடுத்த போட்டியில் விளையாடுவாரா? முக்கிய அப்டேட்!
IPL, Cricket
ரிங்கு சிங் 17 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் ஆட்டமிழக்காமல் 32 ரன்கள் எடுத்தார். சன்ரைசர்ஸ் தரப்பில் பேட் கம்மின்ஸ், முகமது ஷமி, ஜீஷன் அன்சாரி, ஹர்ஷல் படேல் மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். பின்பு இமாலய இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் களமிறங்கியது.
தொடக்கத்தில் தடுமாறிய அந்த அணி டிராவிஸ் ஹெட் (4), அபிஷேக் சர்மா (2) மற்றும் இஷான் கிஷன் (2) ஆகியோரை வைபவ் அரோரா மற்றும் ஹர்ஷித் ராணா வெளியேற்றியதால் 2.1 ஓவர்களில் 9/3 என்ற நிலையில் பரிதவித்தது. பின்பு நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் கமிந்து மெண்டிஸ் கூட்டணி அமைக்க முயன்றனர். ஆனால் நிதீஷ் குமார் ரெடி (15) கமிந்து மெண்டிஸ் (20) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன்பிறகு அந்த அணியால் நிமிரவே முடியவில்லை.
Kolkata Knight Riders, Sunrisers Hyderabad
தொடர்ர்ந்து அனிகேத் வர்மா (6), ஓரளவு போராடிய ஹென்ரிச் கிளாசன் (21 பந்துகளில் 33 ரன்கள்), கேப்டன் பேட் கம்மின்ஸ் (14) என அனைவரும் வரிசையாக வெளியேறியதால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 16.4 ஓவர்களில் 120 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் கொல்கத்தா அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. அந்த அணியின் வைபவ் அரோரா 3 விக்கெட் எடுத்து மேட்ச் வின்னராக ஜொலித்தார்.
வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட் வீழ்த்தினார். 4 போட்டியில் விளையாடியுள்ள கொல்கத்தாவுக்கு இது 2வது வெற்றியாகும். அதே வேளையில் 4 போட்டியில் விளையாடியுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இது 3வது தோல்வியாகும். அதுவும் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சொந்த மண்ணில் ஏமாற்றிய கோலி; ஆட்டம் காட்டிய சின்ன புரூஸ்லி லிவிங்ஸ்டன்: ஆர்சிபி 169/8 ரன்கள் குவிப்பு!