இதனையடுத்து ஆர்சிபி அணியின் பிசியோ உடனடியாக வந்து வலி நிவாரண சிகிச்சை செய்தனர். விராட் கோலியின் காயம் பெரிதாக உள்ளதாவும், அவர் அடுத்த சில ஆட்டங்களில் விளையாட வாய்ப்பில்லை எனவும் தகவல் பரவின. இந்நிலையில், கோலியின் காயம் குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தலைமை பயிற்சியாளர் ஆண்டி ஃப்ளவர் முக்கிய அப்டேட் ஒன்று கூறியுள்ளார். போட்டிக்குப் பிறகு, கோலியின் காயம் மோசமாக உள்ளதா என்று ஆண்டி ஃப்ளவரிடம் கேட்கப்பட்டது. அவர் அந்தக் கவலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, முன்னாள் கேப்டன் முற்றிலும் நலமாக இருப்பதாகக் கூறினார்.
அதாவது, ''விராட் கோலி நலனுடன் இருக்கிறார். எல்லாம் சரியாகி விட்டது'' என்று ஆண்டி ஃப்ளவர் தெரிவித்துள்ளார். இதனால் ஆர்சிபி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே வேளையில் நடப்பு ஐபிஎல் தொடரில் கோலியின் பேட்டிங் எதிர்பார்த்தபடி சரியாக அமையவில்லை. சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் ரன்கள் அடிக்க சிரமப்பட்ட கோலி, நேற்றைய போட்டியில் வெறும் 6 ரன்னில் அவுட் ஆனார். கோலியின் மோசமான பார்ம் தொடர்வதால் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.