CSK vs SRH: இழப்பதற்கு ஏதுமில்லை! தோனி அதிரடி முடிவு! சிஎஸ்கே பிளேயிங் லெவனில் 3 மாற்றம்!

Published : Apr 22, 2025, 01:01 PM IST

சிஎஸ்கே அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 25ம் தேதி எதிர்கொள்ள உள்ள நிலையில், சிஎஸ்கேவின் பிளேயிங் லெவனில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

PREV
14
CSK vs SRH: இழப்பதற்கு ஏதுமில்லை! தோனி அதிரடி முடிவு! சிஎஸ்கே பிளேயிங் லெவனில் 3 மாற்றம்!

CSK playing 11 against SRH: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், கோப்பையை வெல்லும் என கணிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. 8 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே 6 தோல்வி, 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இனி வரும் 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே சிஎஸ்கே ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். 

24
CSK vs SRH, IPL

இனி இழப்பதற்கு ஏதுமில்லை 

சிஎஸ்கேவின் பேட்டிங, பீல்டிங் மோசமாக இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான போட்டியில் பவுலிங்கும் சொதப்பலாக அமைந்து விட்டது. சிஎஸ்கே அணி தனது அடுத்த போட்டியில் வரும் 25ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபத் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இனி இழப்பதற்கு ஏதுமில்லை என்பதால் அடுத்து வரும் போட்டிகளில் துணிந்து அதிரடியுடன் விளையாட சிஎஸ்கே திட்டமிட்டுள்ளது.

டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் 2 சாதனைகளை தகர்த்தெறிந்த சுப்மன் கில்!

34
CSK captain MS Dhoni, Cricket

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு 

இதனால்  சன்ரைசர்ஸ் ஹைதராபத் அணிக்கு எதிரான போட்டியில் பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம் செய்யப்படுகிறது. தொடர்ந்து சொதப்பி வரும் ரவிச்சந்திரன் அஸ்வினும், சில போட்டிகளில் வாய்ப்பளித்தும் சரியாக செயல்படாத ஓவர்டன்னும் அணியில் இருந்து நீக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு பதிலாக அன்ஷீல் கம்போஜும், தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரர் டெவால்ட் பிரெவிஸும் அணியில் சேர்க்கப்படுகின்றனர். இதேபோல் எதிர்பார்த்த அளவு சரியாக விளையாடாத விஜய் சங்கரும் நீக்கப்பட்டு இளம் வீரர் ஆண்ட்ரே சித்தார்த்தும் இடம்பிடிக்கிறார்.

தோனியின் எதிர்கால பிளான் 

ஏற்கெனவே ஷேக் ரஷித், ஆயுஷ் மத்ரே சிஎஸ்கே பிளேயிங் லெவனில் இடம்பிடித்த நிலையில், இப்போது  டெவால்ட் பிரெவிஸ்,  ஆண்ட்ரே சித்தார்த் என மொத்தம் 4 இளம் வீரர்கள் அணியில் இடம்பிடிக்கின்றனர். சிஎஸ்கேவை பொறுத்தவரை இனி அனைத்து போட்டிகளிலும் வென்று பிளே ஆப் சுற்றுக்கு செல்வது இயலாத காரியம். ஆகவே அடுத்த் சீசனுக்கு சரியான அணியை கட்டமைக்கும் வகையில் இனி வரும் போட்டிகளில் இளம் வீரர்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க தோனி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

44
CSK Playing 11

ஆண்ட்ரே சித்தார்த், ஆயுஷ் மத்ரே

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ரச்சின் ரவிந்திரா, ஷேக் ரஷித் வழக்கம்போல் ஒப்பனிங்கில் களமிறங்குகின்றனர். அடுத்ததாக ஆயுஷ் மத்ரே களமிறங்குகிறார். இவரை தொடர்ந்து டெவால்ட் பிரெவிஸ் பேட்டிங் செய்ய இருக்கிறார். இதன்பிறகு நடு வரிசையில் ஆண்ட்ரே சித்தார்த், ஷிவம் துபே, பின்வரிசையில் ஜடேஜா, தோனி பேட்டிங் செய்ய உள்ளனர். அன்ஷுல் காம்போஜ், பதிரனா, கலீல் அகமது, பாஸ்ட் பவுலிங்கிலும், நூர் அகமது, ஜடேஜா ஸ்பின் பவுலிங்கிலும் பங்களிக்க உள்ளனர். 

சிஎஸ்கே பிளேயிங் லெவன் 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே பிளேயிங் லெவன்: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, ஷேக் ரஷித்,  ஆயுஷ் மத்ரே, டெவால்ட் பிரெவிஸ், ரவீந்திர ஜடேஜா, ஆண்ட்ரே சித்தார்த், அன்ஷுல் காம்போஜ், மதிஷா பதிரனா, கலீல் அகமது, நூர் அகமது. ஷிவம் துபே இம்பேக்ட் வீரராக களமிறங்குவார்.

சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆச்சு? ஆர்சிபி போட்டியிலும் விலகல்! திட்டமிட்டு ஓரங்கட்டப்படுகிறாரா?

Read more Photos on
click me!

Recommended Stories