சுப்மன் கில் புதிய சாதனை
இந்த போட்டியின் மூலம் சுப்மன் கில் ஐபிஎல் கிரிக்கெட்டில் 3,500 ரன்களை நிறைவு செய்தார். இதன்மூலம் 25 வயதில் 3,500 ரன்களை நிறைவு செய்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் 26 வயதை அடைவதற்கு முன்பு எந்த வீரரும் 3,000 ரன்கள் கூட எடுக்கவில்லை. ரிஷப் பண்ட் தனது 25 வயதில் 98 போட்டிகளில் 2,838 ரன்கள் அடித்திருந்தார். விராட் கோலி தனது 25 வயதில் 107 போட்டிகளில் 2,632 ரன்கள் எடுத்திருந்தார்.
விராட் கோலி சாதனை முறியடிப்பு
மேலும் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற சுப்மன் கில் 25 வயதில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். சுப்மன் கில் அனைத்து டி20 போட்டிகளிலும் சேர்த்து 12 ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ளார். விராட் கோலி முன்னதாக 25 வயதில் டி20 போட்டிகளில் 11 ஆட்ட நாயகன் விருதுகளுடன் இந்த சாதனையைப் படைத்திருந்தார். இதன்மூலம் கோலி சாதனையை கில் முறியடித்து இருக்கிறார்.
அதிரடியாக விளையாடி கேகேஆருக்கு தண்ணி காட்டிய சாய் சுதர்சன், சுப்மன் கில் – 198 ரன்கள் குவித்த GT!