IPL Auction 2025 : நான்கு வீரர்களை தக்கவைத்த சென்னை - 6.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட டெவோன்!

First Published | Nov 24, 2024, 7:49 PM IST

Chennai Super Kings : சென்னை அணி தன்னிடம் உள்ள 4 முக்கிய வீரர்களை வருகின்ற IPL 2025 போட்டிகளுக்காக தக்கவைத்துள்ளது.

Chennai Super Kings

Chennai Super Kings: 2025ம் ஆண்டு மார்ச் மாதம் நடக்க உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான விளையாட்டு வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு இப்போது சவுதி அரேபியாவில் நடந்த வருகிறது. விறுவிறுப்பாக இந்த ஏலம் நடந்து வரும் நிலையில் அனைத்து அணிகளுக்கும் சுமார் 120 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் ஐபிஎல் ரசிகர்களின் பெரும் ஆதரவோடு பயணித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே தங்களிடமிருந்த நான்கு முக்கிய விளையாட்டு வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

ஷமி முதல் கேஎல் ராகுல் வரையில் செட் 2ல் அதிக தொகைக்கு ஏலம் போன டாப் பிளேயர்ஸ்!

Dhoni CSK

Chennai Super Kings: இதில் Uncapped போட்டியாளராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி (4 கோடி) இடம்பெறுகிறார். அவரை தவிர Ruturaj Gaikwad 18கோடிக்கும், Matheesha Pathirna 13 கோடிக்கும், Shivam Dube 12 கோடிக்கும் மற்றும் Ravindra Jadeja 18 கோடிக்கும் தக்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் நியூசிலாந்து நாட்டு கிரிக்கெட் வீரர் Devon Conway சுமார் 6.2 கோடிக்கு சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறார். அதேபோல Rahul Tripathi 3.4 கோடி ரூபாய்க்கு இப்போது இடம் எடுக்கப்பட்டிருக்கிறார்.

Tap to resize

Devon Conway

Chennai Super Kings: ஆகவே சென்னை அணியை பொறுத்தவரை 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்ள உள்ள 25 பேரில் தற்பொழுது ஏழு போட்டியாளர்கள் உறுதி செய்யப்பட்டு இருக்கின்றனர். இதில் 5 பேர் இந்தியர்கள் இருவர் பிற நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அணி ஐபிஎல் தொடரில் மிகவும் அதிக ரசிகர்களைக் கொண்ட அணி என்பது குறிப்பிடத்தக்கது.

அர்ஷ்தீப் சிங் முதல் ரிஷப் பண்ட் வரை – செட் 1ல் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட டாப் 6 வீரர்கள்!

Latest Videos

click me!