ipl 2022: ஐபிஎல் ப்ளேஆஃப் சுற்றில் யாருக்கு வாய்ப்பு: 6 அணிகள் 3 இடத்துக்கு போட்டி? ஒரு ரவுண்ட்அப்

First Published May 17, 2022, 12:30 PM IST

ipl 2022: ipl playoff chances 2022: ஐபிஎல் டி20 தொடரில் இதுவரை 64 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை ஒரு அணி மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது. இன்னும் 6 அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் தீவிரமாக உள்ளன. அதுகுறித்த ரவுண்ட்அப்பை பார்க்கலாம்.

ராஜஸ்தான் ராயல்ஸ் எவ்வாறு தகுதி பெற முடியும்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வரும் 20ம் தேதி சிஎஸ்கே அணியுடனான போட்டிதான் கடைசி ஆட்டமாகும். சிஎஸ்கே அணியிடம் மோசமாக தோற்காமல் ராஜஸ்தான் அணி தப்பிக்க வேண்டும் அல்லது வெல்ல வேண்டும்.

ஒருவேளை வெற்றி பெற்றால், ப்ளே ஆஃப் சுற்றை ராஜஸ்தான் அணி உறுதி செய்யும். 

ஆனால், சிஎஸ்கே அணியிடம் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி தோற்றால் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ஆர்சிபி அணிகள் நல்ல ரன்ரேட்டில் தங்களின் கடைசி ஆட்டத்தில் வென்றால், அவர்கள் ப்ளேஆஃப் செல்வார்கள்

ஆர்சிபிக்கு வாய்ப்பா

ஆர்சிபி அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் 13 போட்டிகளில் விளையாடி தலா 14 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன.

4-வது இடத்துக்கான தேர்வுக்கு நிகர ரன்ரேட் +0.255 தேவை. ரன் ரேட்டைப் பொறுத்தவரை ஆர்சிபி அணி மைனஸில் இருக்கிறது. 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தலா 12 புள்ளிகளுடன் உள்ளன.பஞ்சாப் அணியைவிட கொல்கத்தா அணி +0.160 என நல்ல ரன்ரேட்டில் இருக்கிறது.

சன்ரைசரஸ் அணி 10 புள்ளிகளுடன் உள்ளது. இன்னும் 2 போட்டிகளில் விளையாட இருக்கிறது. ஆதலால், ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து சன்ரைசர்ஸ் வெளியேற்றப்படவில்லை ஆனால், சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணிகள் வெளியேறிவிட்டன

பஞ்சாப் அணிக்கு வாய்ப்பிருக்கா

வரும் 22ம் தேதி தனது கடைசி லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியுடன் பஞ்சாப் அணி மோதுகிறது.

டெல்லியிடம் நேற்றை ஆட்டத்தில் தோற்றதால், சன்ரைசர்ஸ் அணியை கட்டாயம் வெல்ல வேண்டிய நிலையில் பஞ்சாப் இருக்கிறது.

வென்றால்தான் ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பு பிரகாசமாகும். சன்ரைசர்ஸ் அணியை மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வென்றால், டெல்லி, ஆர்சிபி, கொல்கத்தா அணிகள் தங்களின் கடைசி ஆட்டத்தில் தோற்க வேண்டும்.

ஒருவேளை கொல்கத்தா அணி கடைசி லீக் ஆட்டத்தில்  வென்றால், ஆர்சிபியும், டெல்லியும் தோற்க வேண்டும். கொல்கத்தாவை ப்ளே ஆஃப் வரவிடாமல் செய்ய, பஞ்சாப் அணிக்கு மிகப்பெரிய வெற்றி தேவை

கொல்கத்தா அணி எப்படி தேர்வாகும்

நாளை லக்னோ அணியுடன் கொல்கத்தா அணி கடைசி லீக் ஆட்டத்தில் மோதுகிறது. இரு அணிகளுக்கும் கடைசி லீக் ஆட்டம், வெற்றி இரு அணிகளுக்கும் முக்கியம்.

ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்ய கொல்கத்தாவுக்கு வெற்றி கட்டாயம். தோற்றால் கொல்கத்தா வெளியேறும். 

கொல்கத்தா அணி ப்ளேஆஃப் செல்ல, வெற்றியுடன், டெல்லி, ஆர்சிபி அணிகளும் தோற்பதும் அவசியம். பஞ்சாப், சன்ரைசர்ஸ் அணிகள் 14 புள்ளிகள் பெறக்கூடாது,ரன்ரேட்டும் உயர்வாக இருக்கக் கூடாது.  இவை நடந்தால் கொல்கத்தா ப்ளே ஆஃப் செல்லும்.
 

சன்ரைசர்ஸ் அணிக்கு வாய்ப்பிருக்கா

சன்ரைசர்ஸ் அணி இன்று மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது. அதன்பின் 22ம் தேதி பஞ்சாப் அணியுடன் விளையாடுகிறது.

இரு ஆட்டங்களிலும் சன்ரைசர்ஸ் அணிக்கு மிகப்பெரிய வெற்றி அவசியம். டெல்லி கேபிடல்ஸ், ஆர்சிபி அணிகளும் வெல்லக்கூடாது, கொல்கத்தா அணியும் லக்னோவிடம் தோற்க வேண்டும். இவை நடந்தால் சன்ரைசர்ஸ் அணிக்கு வாய்ப்புள்ளது

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் எவ்வாறு தகுதி பெறும்

நாளை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் லக்னோ அணி மோதுகிறது. ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்ய லக்னோ அணி நாளைய ஆட்டத்தில் வெல்வது அவசியம்.

ஒருவேளை மிகப்பெரிய தோல்வியை லக்னோ சந்தித்தால், டெல்லி, ஆர்சிபி அணிகள் நல்ல ரன்ரேட்டில் கடைசி ஆட்டத்தில் வென்றால், ப்ளேஆஃப் சுற்றை உறுதி செய்யும்.

ஒரு அணி மட்டுமே உறுதி

ப்ளேஆஃப் சுற்றை இதுவரை குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டும்தான் 20 புள்ளிகளுடன் உறுதி செய்துள்ளது.

மீதமுள்ள 3 இடங்களுக்கு 6 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயிட்ஸ் அணி தலா 16 புள்ளிகளுடன் ஏறக்குறைய ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்ய இருக்கின்றன.

மும்பையில் நேற்று நடந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி தோற்கடித்ததன் மூலம் ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்திக்கொண்டது.
 

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு வாய்ப்பிருக்கா

வரும்21ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி மோதுகிறது.

இந்தப் போட்டியில் வென்றால் டெல்லி அணி ப்ளே ஆஃப் செல்ல முடியும். தோல்வி அடைந்தாலும் வாய்ப்புள்ளது, அதாவது ஆர்சிபி அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் தோற்றால் டெல்லி அணி ப்ளே ஆஃப் செல்லலாம்.

ஒருவேளை டெல்லி கேபிடல்ஸ், ஆர்சிபி அணிகள் தோற்றால், சன்ரைசர்ஸ், கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் 14 புள்ளிகள் பெறாத நிலையில், நிகர ரன்ரேட் அடிப்படையில் அணிகள் தேர்வாகும்

ஐபிஎல் 2022- புள்ளிப்பட்டியல்

ஐபிஎல் டி20 தொடரில் இதுவரை 64 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை ஒரு அணி மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது. இன்னும் 6 அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் தீவிரமாக உள்ளன. அணிகளின் புள்ளிவிவரங்களைப் பார்க்கலாம்

click me!