IPL 2022: இந்த சீசனில் என்னை கவர்ந்தது இந்த 2 பசங்க தான்..! சும்மா தெறிக்கவிடுறானுங்க - பிசிசிஐ தலைவர் கங்குலி

First Published May 16, 2022, 6:57 PM IST

ஐபிஎல் 15வது சீசனில் தன்னை கவர்ந்த 2 இளம் ஃபாஸ்ட் பவுலர்கள் யார் யார் என்று பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. இந்த சீசன் முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கான சீசனாக அமைந்துள்ளது. குறிப்பாக இளம் ஃபாஸ்ட் பவுலர்களுக்கான சீசனாக அமைந்துள்ளது. உம்ரான் மாலிக், யஷ் தயால், மோசின் கான், முகேஷ் சௌத்ரி, சிமர்ஜீத் சிங், குல்தீப் சென் ஆகிய ஃபாஸ்ட் பவுலர்கள் அபாரமாக பந்துவீசி அனைவரையும் கவர்ந்துள்ளனர்.
 

இவர்களில் சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடிவரும் உம்ரான் மாலிக் அதிவேகமாக பந்துவீசி எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்கவிடுவதுடன், அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்த சீசனில் டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் ரோவ்மன் பவலுக்கு உம்ரான் மாலிக் 157 கிமீ வேகத்தில் வீசிய பந்துதான் இந்த சீசனின் அதிவேக பந்து. 155 கிமீ வேகத்தில் அவர் வீசிய பந்து, 2வது அதிவேக பந்து. இவர் அக்தரின் அதிவேக பந்து சாதனையையே தகர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், உம்ரான் மாலிக் விரைவில் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று பல முன்னாள் வீரர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதேபோல முகேஷ் சௌத்ரி, சிமர்ஜீத் சிங், யஷ் தயால், மோசின் கான், குல்தீப் சென் ஆகிய இளம் ஃபாஸ்ட் பவுலர்கள் அருமையாக பந்துவீசிவருகின்றனர். இது இந்திய கிரிக்கெட்டுக்கு மிக நல்லது. 
 

இந்நிலையில், இந்த சீசனில் தன்னை கவர்ந்த பவுலர்கள் பற்றி பிசிசிஐ தலைவர் கங்குலி பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய கங்குலி, எத்தனை பேரால் 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசமுடியும்? கண்டிப்பாக நிறைய பேரால் முடியாது. உம்ரான் மாலிக் இந்திய அணிக்காக ஆடினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், அவரை பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். அதிவேகமாக வீசுகிறார் உம்ரான். குல்தீப் சென்-ன்னும்(ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர்) என்னை மிகவும் கவர்ந்துள்ளார். மீண்டும் கம்பேக் கொடுத்த நடராஜனும் நன்றாக வீசிவருகிறார்  என்று கங்குலி தெரிவித்தார்.

click me!