ரஞ்சி டிராபியில் களமிறங்கும் ரோகித் சர்மா; எந்த டீம் தெரியுமா? விராட் கோலி விளையாடுகிறாரா?

First Published | Jan 20, 2025, 6:32 PM IST

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாட உள்ளார். அவர் எந்த டீமில் விளையாடுகிறார்? இதேபோல் விராட் கோலியும் களமிறங்குகிறாரா? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

Rohit Sharma

ரஞ்சி டிராபி கிரிக்கெட்

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 1 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. ரோகித் சர்மா, விராட் கோலியின் படுமோசமான பேட்டிங் இந்திய அணி பெரும் தோல்வியை சந்திக்க காரணமாகி விட்டது. இதனைத் தொடர்ந்து இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

மேலும் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் அனைவரும் ரஞ்சி டிராபி போன்ற உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். அப்படி உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடாத வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தெரிவித்தனர். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் இந்த கருத்துகளை ஏற்றுக் கொண்டார்.

Ranji Trophy

ரோகித் சர்மா எந்த டீம்?

இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் மூத்த வீரர்கள், இளம் வீரர்கள் என அனைவரும் ரஞ்சி டிராபி உள்ளிட்ட உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என பிசிசிஐ உத்தரவிட்டது. இதனால் வேறு வழி இல்லாததால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். 

ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காக ரோகித் சர்மா விளையாட இருக்கிறார். ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணி தனது தொடக்க ஆட்டத்தை ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த போட்டியில் ரோகித் சர்மா களம் காண்கிறார். அஜிங்க்யா ரஹானே மும்பை அணியின் கேப்டனாக செயல்படுவார் என்றூ  மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

IPL வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட பண்ட்: லக்னோ அணியின் கேப்டனாக அறிவிப்பு


Ajinkya Rahane

அஜிங்க்யா ரஹானே கேப்டன் 

மும்பை அணியில் ரோகித் சர்மா தவிர இந்திய அணி வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ரஞ்சி கோப்பை தொடருக்கான மும்பை அணி வீரர்கள்:‍ அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஆயுஷ் மத்ரே, ஷ்ரேயாஸ் ஐயர், சித்தேஷ் லாட், ஷிவம் துபே, ஹார்திக் தாமோர். ஆகாஷ் ஆனந்த், தனுஷ் கோட்யான், ஷம்ஸ் முலானி, ஹிமான்ஷு சிங், ஷர்துல் தாக்கூர், மோஹித் அவஸ்தி, சில்வெஸ்டர் டிசோசா, ராய்ஸ்டன் டயஸ், கர்ஷ் கோத்தாரி.

Virat Kohli

கோலி விளையாடுவாரா?

இதேபோல் பிசிசிஐ கொடுத்த தொடர் அழுத்தம் காரணமாக விராட் கோலியும் ரஞ்சி டிராபியில் டெல்லி அணிக்காக விளையாடுவார் என தகவல்கள் வெளியாயின. ஜனவரி 23ம் தேதி சவுராஷ்டிராவுக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் அவர் களம் காண்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விராட் கோலி திடீரென கழுத்து வலியால் அவதிப்படுவதாகவும், இதற்காக அவர் வலி ஊசி போட்டுக் கொண்டதாகவும் தகவல் வெளியாயின. இதனால் விராட் கோலியும் ரஞ்சி டிராபியில் களம் காண்பாரா? என சந்தேகம் நிலவுகிறது.

தனக்குத் தானே 'ஆப்பு' வைத்த சஞ்சு சாம்சன்; சாம்பியன்ஸ் டிராபியில் சேர்க்கப்படாததற்கு இதுதான் காரணமா?

Latest Videos

click me!