கேப்டன் பாட் கம்மின்ஸ், ஸ்காட் போலண்ட் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். பின்பு ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை துவக்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய உஸ்மான் கவாஜாவும், நாதன் மெக்ஸ்வீனியும் மிகவும் பொறுமையாக கவனமுடன் ஆடினார்கள். ஸ்கோர் 24 ஆக உயர்ந்தபோது இந்த கூட்டணியை பிரித்த பும்ரா, கவாஜாவை 13 ரன்னில் வெளியேற்றினார்.
அதன்பின்பு மெக்ஸ்வீனியுடன் ஜோடி சேர்ந்த மார்னஸ் லாபுஸ்சேன் மேற்கொண்டு விக்கெட்டுகள் விழக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். ஸ்டெம்புக்கு வெளியே சென்ற ப்ந்துகளை தொடவே இல்லை. மறுமுனையில் கவனமுடன் ஆடிய மெக்ஸ்வீனி ஷார்ட் பாலில் சில பெளண்டரிகளை விளாசினார். தொடர்ந்து பும்ரா, சிராஜ், ஹர்சித் ராணா என மாற்றி, மாற்றி பந்துவீசியும் கடைசிவரை இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழந்து 86 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவை விட ஆஸ்திரேலியா 94 ரன்கள் பின் தங்கியுள்ளது. கைவசம் 9 விக்கெட்டுகள் இருப்பதால் தற்போதைய நிலையில் ஆஸ்திரேலியாவே வலுவாக உள்ளது. முதல் நாளில் இந்தியாவின் சரிவுக்கு காரணம் பேட்ஸ்மேன்கள் தான். விராட் கோலி, கே.எல்.ராகுல் தேவையில்லாமல் வெளியே சென்ற பந்தை தொட்டு ஆட்டமிழந்து தவறிழைத்தனர்.