யாரு சாமி நீ; இப்படி பொழந்து கட்டியிருக்க – டி20யில் ஃபாஸ்டா சதம் அடித்து அபிஷேக் சர்மா சாதனை!

First Published | Dec 6, 2024, 5:24 PM IST

Abhishek Sharma Hit Fastest T20 Hundred in Syed Mushtaq Ali Trophy : சையது முஷ்டாக் அலி டிராபியில் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

Abhishek Sharma Hit Fastest T20 Hundred

Abhishek Sharma Hit Fastest T20 Hundred in Syed Mushtaq Ali Trophy : இந்திய அணியின் இளம் அதிரடி வீரர் அபிஷேக் சர்மா, சையது முஷ்டாக் அலி கோப்பையில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார். மேகாலயாவுக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பறக்கவிட்டார். இதன் மூலமாக அதிவேக சதம் அடித்து சாதனை படைத்தார்.

வெறும் 28 பந்துகளில் சதமடித்து அவர் சாதனை படைத்தார். இது டி20 போட்டிகளில் இரண்டாவது அதிவேக சதம் ஆகும். இந்த சதத்தில் அபிஷேக் சர்மா 11 சிக்ஸர்கள் அடித்தார். பஞ்சாப் அணி 10வது ஓவரிலேயே மேகாலயா அணி நிர்ணயித்த 143 ரன்கள் என்ற இலக்கை எட்டிப் பிடித்தது.

Abhishek Sharma, Team India, Cricket

அபிஷேக் சர்மா இந்த அதிரடி இன்னிங்ஸில் 98 ரன்களை பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் மூலமே எடுத்தார். 2024 ஆம் ஆண்டு அபிஷேக் சர்மாவுக்கு மிகவும் அதிர்ஷ்டமான ஆண்டாக அமைந்துள்ளது. ஐபிஎல் தொடரிலும் அவர் அதிரடியாக விளையாடினார். இப்போது அடுத்தடுத்து சாதனைகளை படைத்து வருகிறார்.

Tap to resize

Abhishek Sharma Hit Fastest T20 Hundred in Syed Mushtaq Ali Trophy

இந்திய அணியிலும் அறிமுகமாகி ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் போட்டியில் சதமடித்தார். அதன் பிறகு அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் சற்று சரிந்தது. ஆனாலும் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் 12 போட்டிகளில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 171.81 ஆக உள்ளது. சர்வதேச டி20 போட்டிகளில் அவர் 256 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதமும் அடங்கும்.

Abhishek Sharma Hit Fastest T20 Century in Syed Mushtaq Ali Trophy

28 பந்துகளில் சதம்

நேற்று நடைபெற்ற சையது முஷ்டாக் அலி டிராபி போட்டியில் பஞ்சாப் அணி மேகாலயா அணியை எதிர்கொண்டது. மேகாலயா அணி பஞ்சாப் அணிக்கு 143 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 29 பந்துகளில் 106 ரன்கள் குவித்து 9.3 ஓவர்களில் அணியை வெற்றி பெறச் செய்தார். இந்த இன்னிங்ஸில் அபிஷேக்கின் ஸ்ட்ரைக் ரேட் 356.52 ஆக இருந்தது.

Abhishek Sharma

அபிஷேக் சர்மாவுக்கு முன்பு குஜராத் வீரர் உர்வில் படேல் சாதனை

அபிஷேக் சர்மாவுக்கு முன்பு இந்த சாதனையை குஜராத் வீரர் உர்வில் படேல் படைத்திருந்தார். கடந்த மாதம் 27 ஆம் தேதி திரிபுராவுக்கு எதிரான போட்டியில் 28 பந்துகளில் சதமடித்திருந்தார். அதற்கு முன்பு ரிஷப் பண்ட் டெல்லி அணிக்காக விளையாடும்போது 32 பந்துகளில் அதிவேக டி20 சதம் அடித்திருந்தார். இப்போது அபிஷேக் சர்மா இரண்டாவது அதிவேக டி20 சதம் அடித்த வீரர் என்ற பெருமையை உர்வில் படேலுடன் பகிர்ந்து கொள்கிறார்.

Abhishek Sharma Hit Fastest T20 Hundred in Syed Mushtaq Ali Trophy

திரிபுராவுக்கு எதிரான போட்டியில் குஜராத் வீரர் உர்வில் படேல் 113 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரிகளும் 13 சிக்ஸர்களும் அடங்கும். அவரது அதிரடி ஆட்டத்தால் அணி 58 பந்துகள் மீதமிருக்கவே இலக்கை எட்டியது.

Latest Videos

click me!