தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் முதல் பந்திலேயே மிட்சல் ஸ்டார்க்கிடம் LBW முறையில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் களம் இறங்கிய சுப்மன் கில் கே.எல்.ராகுலடன் சேர்ந்து சிறிது நேரம் தாக்குபிடித்து ஆடினர். ஆனால் இந்த ஜோடியும் நிலைத்து நிற்கவில்லை. கே.எல்.ராகுல் (KL Rahul) 37 ரன்களும், கில் 31 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். விராட் கோலி 7 ரன்களிலும், ரிஷப் பண்ட் 21 ரன்களிலும் நடையை கட்டினர்.