1 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கத்துடன் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 224 தொடரை நிறைவு செய்த இந்தியா? பட்டியலில் எந்த இடம்?

First Published | Aug 11, 2024, 9:04 PM IST

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் இந்தியா ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்கள் பெற்று 6 பதக்கங்களுடன் தொடரை நிறைவு செய்துள்ளது.

Paris 2024 Olympics India Medal Table

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடர் கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொடக்க விழா நிகழ்ச்சியுடன் பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில், இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று 16 விளையாட்டுகளில் பங்கேற்றனர். அதோடு, இந்தியாவிற்கு ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் 5 வெண்கலப் பதக்கம் என்று மொத்தமாக 6 பதக்கங்களை மட்டுமே கைப்பற்றி கொடுத்தனர்.

Paris Olympics 2024 India Medal Table

இதன் காரணமாக இந்தியா ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் 71ஆவது இடத்தில் உள்ளது. ஆனால், கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கம் என்று 7 பதக்கங்களுடன் 48ஆவது இடத்தில் இருந்தது.

Latest Videos


Olympics 2024 Medal Table

இதுவரையில் இந்தியா ஒலிம்பிக் தொடரில் பங்கேற்று மொத்தமாக 41 பதக்கங்களை குவித்துள்ளது. ஒலிம்பிக் தொடரில் அதிகபட்சமாக ஹாக்கி 8 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. மேலும், மல்யுத்த போட்டியிலும் இந்தியா 8 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. சிறந்த ஒலிம்பிக் தொடராக கடந்த 2020ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் அமைந்துள்ளது.

Paris 2024 Medal Table

பாரிஸ் ஒலிம்பி தொடரில் அதிகபட்ச தங்கப் பதக்கங்களை கைப்பற்றி சீனா பதக்கப் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. இதுவரையில் சீனா 40 தங்கம், 27 வெள்ளி மற்றும் 24 வெண்கலப் பதக்கம் என்று மொத்தமாக 91 பதக்கங்களை வென்று நம்பர் 1 இடத்தில் உள்ளது. இதே போன்று அமெரிக்கா, 38 தங்கப் பதக்கம், 42 வெள்ளிப் பதக்கம் மற்றும் 43 வெண்கலப் பதக்கம் என்று மொத்தமாக 123 பதக்கங்களை குவித்து 2ஆவது இடத்தில் உள்ளது.

Paris Olympics 2024

மேலும், ஜப்பான் 44, ஆஸ்திரேலியா 51, பிரான்ஸ் 63, இங்கிலாந்து 64, நெதர்லாந்து 33, கொரியா 31, ஜெர்மனி 32, இத்தாலி 39 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இந்த நிலையில் தான் கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொடக்க விழாவுடன் தொடங்கிய பாரிஸ் ஒலிம்பிக் தொடரானது இன்று ஆகஸ்ட் 11 ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

Paris Olympics 2024

இன்று இரவு 12.30 மணிக்கு (ஆகஸ்ட் 12) நடைபெறும் நிறைவு விழாவில் இந்தியா சார்பில் ஹாக்கியிலிருந்து ஓய்வு பெற்ற பிஆர் ஸ்ரீஜேஷ் மற்றும் இந்தியாவிற்கு 2 பதக்கங்களை வென்று கொடுத்த மனு பாக்கர் ஆகியோர் இந்திய தேசிய கொடியை ஏந்தி அணி வகுப்பு நிகழ்ச்சியை நடத்துகின்றனர். தொடக்க விழாவில் இந்தியா சார்பில் பிவி சிந்து மற்றும் சரத் கமல் இருவரும் தேசிய கொடியை ஏந்தி அணி வகுப்பு நிகழ்ச்சி நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!