Mohammed Siraj Car: குடும்பத்திற்காக தனது ”டிரீம் காரை” வாங்கிய முகமது சிராஜ் – காரின் விலை எவ்வளவு தெரியுமா?

First Published | Aug 11, 2024, 8:29 PM IST

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் நியூ லேண்ட் ரோவர் என்ற தனது டிரீம் காரை வாங்கியுள்ளார்.

Mohammed Siraj Dream Car

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். இதுவரையில் 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 104 ரன்கள் மற்றும் 74 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

Mohammed Siraj New Car

இதே போன்று, 41 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 68 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். மேலும், 16 டி20 போட்டிகளில் விளையாடி 452 ரன்கள் எடுத்துள்ளார். அதோடு, 14 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இடம் பெற்று விளையாடினார்.

Tap to resize

Mohammed Siraj Dream Car

இதில், 3 டி20 போட்டிகளில் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகளில் 3 விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றினார். இலங்கைத் தொடரைத் தொடர்ந்து இந்தியா வரும் வங்கதேச அணியானது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் சிராஜ் இடம் பெற்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Mohammed Siraj New Car

பொதுவாகவே விளையாட்டு வீரர்கள் கார், பைக் ஆகியவற்றின் மீது காதல் கொண்டுள்ளனர். ஏராளமான கார்களை வாங்கி தங்களது கேரேஜ்களில் வைத்துக் கொள்ள விரும்புகின்றனர். அதற்கு சிறந்த உதாரணம் எம்.எஸ்.தோனி. கார் மற்றும் பைக் நிறுத்தி வைக்கவே தனியாக கேரேஜ் வைத்துள்ளார். விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் கார் பிரியர்கள்.

Mohammed Siraj New Car

சமீபத்தில் சூர்யகுமார் யாதவ் புதிதாக Mercedes G63 AMG என்ற காரை வாங்கினார். இந்த நிலையில் தான் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். ஆம், ஆடம்பரமான சொகுசு காரான லேண்ட் ரோவர் காரை வாங்கியுள்ளார். அவரது குடும்பத்திற்காகவே இந்த புதிய காரை வாங்கியுள்ளார். இது அவரது கனவு கார் ஆகும்.

Mohammed Siraj New Land Rover

இந்த காரின் மதிப்பு மட்டும் ரூ.2.39 கோடி முதல் ரூ.4.17 கோடி வரையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகமது சிராஜ் கூறியிருப்பதாவது: கனவுகளுக்கு வரம்புகள் இல்லை. அவை உங்களை கடினமாக உழைக்க வைக்கும். நிலைத்தன்மையுடன் நீங்கள் எடுக்கும் முயற்சியே உங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.

Mohammed Siraj New Car

எல்லாம் வல்ல இறைவனின் ஆசிர்வாதங்களுக்காகவும், எனது குடும்பத்திற்காகவும் லேண்ட் ரோவர் பிரைட் மோட்டார்ஸ் நிறுவனத்திடமிருந்து இந்த கனவு காரை வாங்குவதற்கு என்னை தகுதி உடையவனாய் மாற்றியதற்கு நன்றி என்று கூறியுள்ளார்.

Latest Videos

click me!