நான் நீயாகவும், நீ நானாகவும் மாறும் நாள் - எளிமையாக நடந்த இந்திய கிரிக்கெட் வீரர் சேத்தன் சகாரியா திருமணம்!

Published : Jul 23, 2024, 05:19 PM IST

இந்திய கிரிக்கெட் வீரர் சேத்தன் சகாரியா கடந்த 14 ஆம் தேதி திருமணம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

PREV
14
நான் நீயாகவும், நீ நானாகவும் மாறும் நாள் - எளிமையாக நடந்த இந்திய கிரிக்கெட் வீரர் சேத்தன் சகாரியா திருமணம்!
Chetan Sakariya Marriage

ஐபிஎல் தொடர் மூலமாக இந்திய அணியில் இடம் பிடித்தவர் குஜராத்தைச் சேர்ந்த சேத்தன் சகாரியா. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அறிமுகமானார். அந்த தொடரில் இடம் பெற்று விளையாடி 14 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

24
Chetan Sakariya Meghna Marriage

இந்த சீசனில் சிறப்பாக விளையாடியதைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் ரூ.4.20 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஆனால் அந்த சீசனில் போதுமான வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த நிலையில் தான் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ரூ.50 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்ட சேத்தன் சகாரியா ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.

34
Meghana Chetan Sakariya Wedding Photos

எனினும், இந்த சீசனில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 3ஆவது முறையாக டிராபியை கைப்பற்றியது. இந்த நிலையில் தான் 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி சிறப்பாக பந்து வீசி அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய சேத்தன் சகாரியா இலங்கைக்கு எதிரான தொடரில் இடம் பெற்றார். ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும், டி20 தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்தார்.

44
Chetan Sakariya Meghna Wedding Photos

அனால், ஒரு டி20 போட்டியில் மட்டுமே விளையாடி ஒரு விக்கெட் கைப்பற்றியிருக்கிறார். இந்த நிலையில் தான் சேத்தன் சகாரியா மற்றும் மேகனா கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நிலையில், கடந்த 14 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று பகிர்ந்துள்ளார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories