டெல்லி கேபிடல்ஸ் இதை மட்டும் செய்தால், சிஎஸ்கேயின் புதிய கேப்டனாக ரிஷப் பண்ட்டிற்கு வாய்ப்பு?

Published : Jul 23, 2024, 04:05 PM IST

2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுக்கான முதல் தேர்வு ருதுராஜ் கெய்க்வாட் இல்லையென்றால் வேறு யார் சிஎஸ்கே அணியின் கேப்டன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

PREV
16
டெல்லி கேபிடல்ஸ் இதை மட்டும் செய்தால், சிஎஸ்கேயின் புதிய கேப்டனாக ரிஷப் பண்ட்டிற்கு வாய்ப்பு?
Chennai Super Kings

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசனில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 3ஆவது முறையாக டிராபியை கைப்பற்றியது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

26
IPL 2025 Mega Auction

இவரது தலைமையிலான சிஎஸ்கே அணியானது விளையாடிய 14 போட்டிகளில் 7ல் வெற்றியும், 7ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடம் பிடித்து பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து கடைசி அணியாக வெளியேறியது. இந்த தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் விளையாடிய 14 போட்டிகளில் 583 ரன்கள் குவித்தார்.

36
IPL 2025, MS Dhoni

இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு இறுதிக்குள் ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 3 முதல் 4 வீரர்களை தக்க வைக்க பிசிசிஐ அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வரும் 30 அல்லது 31 ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.

46
MS Dhoni

இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு 2025 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரின் போது விக்கெட் கீப்பரான தோனி தனது ஓய்வு முடிவு குறித்து அறிவிக்க வாய்ப்புகள் இருக்கிறது.

56
Ruturaj Gaikwad

அதன் பிறகு சிஎஸ்கே அணிக்கு அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர் இல்லை. ஆதலால், தான் டெல்லி கேபிடல்ஸ் அணியானது ரிஷப் பண்டை விடுவித்தால், அவர் சிஎஸ்கே அணியில் இடம் பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியானது.

66
CSK, Rishabh Pant

ஒருவேளை சிஎஸ்கே அணியில் ரிஷப் பண்ட் இடம் பெற்றால் அவர் தான் கேப்டனுக்கான முதல் தேர்வாக இருப்பார் என்று கூறப்படுகிறது. சிஎஸ்கே நிர்வாகம் அணியின் கேப்டனை மாற்ற நினைத்தால் அதற்கு பண்ட் சரியான தேர்வாக இருப்பார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories