3ஆவது போட்டியிலும் தோல்வி - 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றி சாதனை படைத்த இலங்கை!

Published : Aug 07, 2024, 09:27 PM IST

இலங்கைக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய நிலையில் 27 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை ஒருநாள் தொடரை 2-0 என்று கைப்பற்றியுள்ளது.

PREV
17
3ஆவது போட்டியிலும் தோல்வி - 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றி சாதனை படைத்த இலங்கை!
India vs Sri Lanka ODI

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்கள் குவித்தது.

27
India vs Sri Lanka ODI Live

இதில், அதிகபட்சமாக அவிஷ்கா ஃபெர்னாண்டோ 96 ரன்கள் எடுத்தார். குசால் மெண்டிஸ் 59 ரன்களும், பதும் நிசாங்கா 45 ரன்களும் எடுத்தனர். பின்னர் கடின இலக்கை துரத்திய இந்தியா இந்தப் போட்டியில் கட்டாய வெற்றியை நோக்கி பேட்டிங் செய்தது. ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

37
IND vs SL 3rd ODI Match

இதில் சுப்மன் கில் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 35 ரன்களில் நடையை கட்டினார். பின்னர் வந்த ரிஷப் பண்ட் 6 ரன்னிலும், விராட் கோலி 20 ரன்னிலும், ஷ்ரேயாஸ் ஐயர் 8, அக்‌ஷர் படேல் 2 என்று ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.

47
Rohit Sharma

ஒரு கட்டத்தில் 12.5 ஓவர்களில் இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பின்னர் ரியான் பராக் மற்றும் ஷிவம் துபே இருவரும் இணிந்து 7ஆவது விக்கெட்டிற்கு 18 ரன்கள் எடுத்தனர். ரியான் பராக் 15 ரன்னிலும், துபே 9 ரன்னிலும் நடையை கட்டினர்.

57
India vs Sri Lanka ODI Live

கடைசியில் வாஷிங்டன் சுந்தர் மட்டும் நிதானமாக விளையாடி நம்பிக்கை கொடுத்தார். எனினும் அவரும் 25 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் 6 ரன்னில் வெளியேற இறுதியாக இந்தியா 26.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்து 110 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியை தழுவியது.

67
India vs Sri Lanka 3d ODI

இதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை 2-0 என்று கைப்பற்றியுள்ளது. அதோடு 27 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

77
IND vs SL 3rd ODI

இலங்கை அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் துணித் வெல்லாலகே 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஜெஃப்ரே வாண்டர்சே மற்றும் மகீஷ் தீக்‌ஷனா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். அசித் ஃபெர்னாண்டோ ஒரு விக்கெட் எடுத்தார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories