Hardik Pandya Creates History Record: ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 203 ரன்கள் குவித்தது. பின்பு விளையாடிய மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
Hardik Pandya creates History, IPL
ஹர்திக் பாண்ட்யா 5 விக்கெட்
இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 4 ஓவர்களில் 35 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் கேப்டன் என்ற பெருமையை ஹர்திக் பாண்ட்யா பெற்றுள்ளார். மேலும் ஆர்சிபி முன்னாள் கேப்டன் அனில் கும்பிளேவின் 16 ஆண்டு கால சாதனையையும் பான்ட்யா முறியடித்துள்ளார்.
ஆர்சிபி முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே 2010ம் ஆண்டு நவி மும்பையில் உள்ள DY பாட்டீல் மைதானத்தில் நடந்த போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக 3.3 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி இருந்தார். இப்போது ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக 5 விக்கெட் வீழ்த்தி இந்த சாதனையை தகர்த்தெறிந்துள்ளார்.
சிஎஸ்கே கேப்டனாகும் தோனி! ருத்ராஜ் கெய்க்வாட் இடத்தை நிரப்பும் 19 வயது பேட்ஸ்மேன்!
LSG vs MI, Cricket
பாண்ட்யாவின் சாதனையை முறியடிப்பது கஷ்டம்
ஐபிஎல் தொடரில் ஜேபி டுமினி, ஷேன் வார்ன் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் கேப்டனாக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அனில் கும்பிளேவுக்கு அடுத்த இடத்தில் உள்ளனர். ஐபிஎல் கேப்டனாக 30 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹர்திக் பாண்ட்யா, அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய கேப்டன்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் 2008ல் வெற்றி பெற உதவிய ஷேன் வார்ன் 57 விக்கெட்டுகளுடன் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
ஐபிஎல் கேப்டன்களாக அனில் கும்ப்ளே 30 விக்கெட், ரவிச்சந்திரன் அஸ்வின் 25 விக்கெட், மற்றும் பேட் கம்மின்ஸ் முறையே 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். ஒரு ஐபிஎல் கேப்டனாக ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்திய ஹர்திக் பாண்ட்யாவின் சாதனையை முறியடிக்க இப்போதைக்கு வேறு யாருக்கும் வாய்ப்பில்லை. ஏனெனில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு அடுத்து சன்ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ் மட்டும் தான் பவுலராக உள்ளார். மற்ற அணிகளின் கேப்டன்கள் அனைவரும் பேட்ஸ்மேன்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Hardik Pandya, MI, Sports News in Tamil
மும்பை இந்தியன்ஸ் தோல்வியால் விரக்தி
லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா 5 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்திருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்வி அவரை கடும் விரக்திக்குள்ளாக்கியிருக்கிறது. போட்டி முடிந்த பிறகு இதை வெளிக்காட்டிய ஹர்திக் பாண்ட்யா, ''தோல்வி மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் 10 அல்லது 12 ரன்கள் அதிகமாக கொடுத்து விட்டோம். பேட்டிங் யூனிட்டில் முழுமையாக சொதப்பியுள்ளோம். நாங்கள் ஒரு அணியாக வெற்றி பெறுகிறோம், ஒரு அணியாக தோற்கிறோம். தோல்விக்கு முழு பொறுப்பையும் நான் எடுத்துக் கொள்கிறேன்'' என்று தெரிவித்தார்.
ஃபார்மில் இல்லாத ரோகித் சர்மாவுக்கு காயமா? சும்மா சொல்லி உட்கார வச்ச மும்பை இந்தியன்ஸ்?