Axar Patel, KL Rahul, Who is CSK Captain?
2 ஆண்டுகளுக்கு பிறகு கேப்டனாகும் தோனி
MS Dhoni Captain For CSK in IPL 2025 : கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியை மீண்டும் மைதானத்தில் பார்ப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி. ரசிகர்கள் தோனி பேட்டிங்கை பார்த்து மகிழ்ந்தனர். எம்.எஸ்.தோனி 2 வருடங்களுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக திரும்புகிறார். டெல்லிக்கு எதிரான போட்டியில் தோனி கேப்டனாக இருப்பார். 2023ல் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஏப்ரல் 5ல் டெல்லிக்கு எதிரான போட்டியில் கெய்க்வாட் விளையாடமாட்டார்.
MA Chidambaram Stadium, CSK vs DC IPL 2025
ருதுராஜ் கெய்க்வாட் காயம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் காயம் அடைந்த நிலையில் அவர் இன்னும் குணமடையவில்லை. இதன் காரணமாக அவர் நாளை நடைபெறும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இடம் பெறுவதில் சந்தேகம் ஏற்பட்டது.
Ruturaj Gaikwad, Ruturaj Gaikwad Injury
ரவீந்திர ஜடேஜா அல்லது எம் எஸ் தோனி
அப்படி நாளை நடைபெறும் போட்டியில் இடம் பெறவில்லை என்றால் சிஎஸ்கே அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது. அதில், ரவீந்திர ஜடேஜா மற்றும் எம் எஸ் தோனி இருவரது பெயரும் இடம் பெற்றது. ஏற்கனவே ஜடேஜா சிஎஸ்கே அணியை வழிநடத்தி அடுத்தடுத்து தோல்விகளை பெற்றுக் கொடுத்தார். ஆதலால், அவர் கேப்டனாக செயல்பட வாய்ப்புகள் குறைவு.
Ravindra Jadeja, IPL 2025, CSK vs DC IPL 2025
சிஎஸ்கேயின் ஒன்டே கேப்டன் யார்?
கெய்க்வாட் இல்லாத நிலையில் சிஎஸ்கே கேப்டன் பொறுப்பை ஏற்க வேறு எந்த வீரரும் தற்போது சிஎஸ்கே அணியில் இல்லை. இதனால் தோனிக்கு கேப்டன் பதவி கிடைக்கும். ஒருவேளை தோனி கேப்டன் பொறுப்பை ஏற்கவில்லை என்றால் அனுபவம் வாய்ந்த வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. அஸ்வினும் அதற்காக தயாராகத்தான் இருக்கிறார். 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. விளையாடிய 3 போட்டியில் 2ல் தோல்வி அடைந்துள்ளது.
CSK New Captain, Ravichandran Ashwin
ஐபிஎல் 2025 புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடம்:
சென்னையில் நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மீண்டும் சென்னையில் நடந்ஹ 2ஆவது ஆர்சிபி அணிக்கு எதிராக 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதே போன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
CSK One Day Captain MS Dhoni
சிஎஸ்கே – டெல்லி கேபிடல்ஸ்
இதன் மூலமாக விளையாடிய 3 போட்டியில் 2ல் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடம் பிடித்துள்ளது. நாளை 5ஆம் தேதி சென்னையில் நடைபெறும் 17ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் முதலில் பேட்டிங் செய்து 180 ரன்களுக்கு மேல் குவித்தால் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஒருவேளை சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்தால் இந்தப் போட்டி சற்று கடினமானதாக மாறக் கூடும்.