சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று 5ல் தோல்வி அடைந்து 4 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. சிஎஸ்கே தனது அடுத்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வரும் 20ம் தேதி விளையாட உள்ளது. இந்நிலையில், சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். குர்ஜப்னீத் சிங்கிற்கு பதிலாக தென்னாப்பிரிக்காவின் இளம் சர்வதேச வீரர் டெவால்ட் பிரெவிஸ் சிஎஸ்கே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சிஎஸ்கே பட்டியலில் ஒரு வெளிநாட்டு இடம் மீதமுள்ளதால், குர்ஜப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் பிரெவிஸை அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஏலத்தில் பிரெவிஸின் அடிப்படை விலை 75 லட்சம் ரூபாய் மட்டுமே என்றாலும், சிஎஸ்கே அவரை 2.2 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது. டெவால்ட் பிரெவிஸ் ஏற்கனவே ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மொத்தம் 10 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
MIக்கு எதிரான போட்டியில் புதிய கேப்டனை தேடும் CSK! தோனிக்கு என்ன ஆச்சி?