Kuldeep Yadav slapping Rinku Singh: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 204 ரன்கள் குவித்தது. பின்பு ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 190 ரன்கள் மட்டுமே எடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கொல்கத்தா அணி வீரர் ரிங்கு சிங் 25 பந்துகளில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 36 ரன்கள் அடித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.
24
Kuldeep Yadav slapped Rinku Singh
ரிங்கு சிங்கை அறைந்த குல்தீப் யாதவ்
இந்த போட்டி முடிந்தபிறகு மைதானத்தில் ரிங்கு சிங் மற்றும் சில கிரிக்கெட் வீரர்களுடன் குல்தீப் யாதவ் உரையாடிக் கொண்டிருந்தார். அவர்களிடம் சகஜமாக உரையாடிக் கொண்டிருந்த குல்தீப் யாதவ் திடீரென ரிங்கு சிங் கண்ணத்தில் பளார் என அறைந்தார். குல்தீப் விளையாட்டுக்கு அடித்ததால் ரிங்கு சிங் பதிலுக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் அவரது முகபாவனைகள் மாறின. அவர் மிகுந்த அதிருப்தியுடனும், கோபத்துடனும் காணப்பட்டார்.
குல்தீப் யாதவ்வுக்கு கண்டனம்
குல்தீப் யாதவ் மற்றும் ரிங்கு சிங் ஐபிஎல்லில் வேறு அணிகளுக்காக விளையாடினாலும் உள்நாட்டுக் கிரிக்கெட்டில் இருவரும் உத்தரப் பிரதேச அணிக்காக இணைந்து விளையாடுகின்றனர். இதனால் இருவரும் நல்ல நண்பர்கள். இதனால் நட்பு முறையில் விளையாட்டுக்காக அவர் ரிங்கு சிங்கை அறைந்துள்ளார்.
குல்தீப் யாதவ் ரிங்கு சிங்கின் கண்ணத்தில் அறையும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. குல்தீப் யாதவ்வுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
34
Delhi Capitals, IPL
டெல்லி கேப்பிடல்ஸ் அணி மவுனம் கலைத்தது
''என்ன தான் நண்பர்களாக இருந்தாலும் பொதுவெளியில் இப்படி அறைந்தது தவறு தான். ஏனெனில் ரிங்கு சிங்கும் மிகவும் பிரபலமான ஒரு கிரிக்கெட் வீரர்'' என்று பலரும் தெரிவித்தனர். குல்தீப் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இந்நிலையில், குல்தீப் யாதவ், ரிங்கு சிங் விவகாரம் குறித்து குல்தீப் அங்கம் வகிக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மவுனம் கலைத்துள்ளது.
அதாவது குல்தீப் யாதவ் மற்றும் ரிங்கு சிங் ஒன்றாக இணைந்து போஸ் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்ட டெல்லி கேப்பிடல்ஸ், ''ஒன்லி காதல்'' என்று தெரிவித்துள்ளது. இதன்மூலம் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.