sports
இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் தற்போது அதிகம் பேசப்படும் வீரராக வலம் வருகிறார்.
சமாஜ்வாடி கட்சி எம்.பி. பிரியா சரோஜாவை ரிங்கு சிங் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகின.
ரிங்கு சிங் தனது சொந்த ஊரான அலிகாரில் ரூ.3.5 கோடி மதிப்புள்ள பங்களாவை அண்மையில் வாங்கினார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின.
ஆனால் ரிங்கு சிங்கின் பெற்றோர் மகன் ஆசையாக அழைத்தும் புதிய பங்களாவிற்கு வர மறுத்துள்ளனர். இதற்கு ஒரு பெரிய காரணம் உள்ளது.
பல்வேறு கஷ்டங்களையும், மகிழ்ச்சியையும் கொடுத்த வீட்டை விட்டு வெளியேற அவர்களுக்கு மனம் வரவில்லை. ரிங்கு சிங் பிறந்து வளர்ந்த வீடுதான் தங்களுக்கு முக்கியம் என்று கூறியுள்ளனர்.
இத்தனை நாள் தங்களை வாழவைத்த வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.
ரிங்கு சிங் மிகவும் ஏழ்மையான குடும்ப பின்னணியை கொண்டவர். அவரது தந்தை சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியை செய்து வந்தார்.
''ஓய்வு நேரத்தில் தனது தந்தைக்கு சிலிண்டர்களை சப்ளை செய்வதன் மூலம் உதவினேன்'' என்று ரிங்கு சிங் ஒரு பேட்டியில் கூறினார்.
ரிங்கு சிங் இந்தியாவுக்காக 2 ஒருநாள் மற்றும் 32 T20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 592 ரன்கள் எடுத்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மேட்ச் வின்னராக விளங்கி வருகிறார்.
ரிங்கு சிங்கை ரூ.13 கோடிக்கு கொல்கத்தா அணி தக்கவைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.