MS Dhoni CSK Eliminated From IPL 2025 Playoffs : ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து முதல் அணியாக தொடரிலிருந்து வெளியேறியது சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.
MS Dhoni CSK Eliminated From IPL 2025 Playoffs : ஐபிஎல் தொடரில் அதிக முறை டிராபி அணிகளின் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடம் பெற்றுள்ளது. தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியானது 5 முறை டிராபியை கைப்பற்றியுள்ளது. 6ஆவது முறையாக டிராபியை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2025 தொடரின் 18ஆவது சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்தி வெற்றியோடு இந்த சீசனை தொடங்கியது.
28
ருதுராஜ் கெய்க்வாட் டூ தோனி கேப்டன்
இந்தப் போட்டிக்கு பிறகு சிஎஸ்கே விளையாடிய 5 போட்டியிலும் வரிசையாக தோல்வியை தழுவியது. முதல் 5 போட்டிகளுக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக இருந்து சிஎஸ்கே அண்யை வழிநடத்திச் சென்ற நிலையில் சிஎஸ்கே அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதைத் தொடர்ந்து ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக இந்த சீசனிலிருந்து வெளியேற அவருக்குப் பதிலாக 6ஆவது போட்டி முதல் தோனி கேப்டனாக செயல்பட்டார். முதல் போட்டியிலேயே சிஎஸ்கே தோல்வி பெற அடுத்த போட்டியில் வெற்றியை ருசித்தது.
38
முதல் அணியாக வெளியேறிய சிஎஸ்கே
ஆனால், அதன் பிறகு நடந்த பஞ்சாப் கிங்ஸ் போட்டி உள்பட ஹாட்ரிக் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய 10 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்று 8 போட்டிகளில் தோல்வியை தழுவியது. அதுமட்டுமின்றி 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து முதல் அணியாக வெளியேறியது.
இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கடைசி வரை போராடி ஆர்சிபியிடம் தோற்று பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து கடைசி அணியாக வெளியேறியது. ஆனால் இந்த சீசனில் முதல் அணியாக பிளே ஆஃப் வாய்ப்பு இழந்து பரிதாபமாக வெளியேறியிருக்கிறது.
58
சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 49ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே சாம் கரண் மற்றும் டெவால்ட் பிரேவிஸின் அதிரடியால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்கள் குவித்தது. போட்டியின் 19ஆவது ஓவரை வீசிய யுஸ்வேந்திர சஹாலின் ஓவர் தான் திருப்பு முனையை ஏற்படுத்தியது. அந்த ஓவரில் 4 விக்கெட்டுகள் விழுந்தது.
68
யுஸ்வேந்திர சஹால் ஹாட்ரிக் விக்கெட்
இந்தப் போட்டியில் 19ஆவது ஓவரை வீசிய சஹால் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்தார். மேலும், சிஎஸ்கே அணிக்கு எதிராக முதல் முறையாக ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்தார். சேப்பாக்கத்தில் 2008ல் லட்சுமி பாலாஜிக்கு பிறகு 2ஆவது வீரராக சஹால் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் (2022 மற்றும் 2025) அதிக முறை ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய வீரர்கைளின் பட்டியலில் சஹால் 3ஆவது இடம் பிடித்தார்
78
பஞ்சாப் கிங்ஸ் வெற்றி:
பின்னர் கடின இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிராப்சிம்ரன் சிங் நல்ல தொடக்கம் கொடுத்தார். அவர், 54 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயா ஐயர் அதிரடியாக விளையாடி 72 ரன்கள் எடுத்து கொடுத்தார். ஷஷாங்க் சிங் 23 ரன்கள் எடுத்தார். இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
88
ஐபிஎல் 2025 புள்ளிப்பட்டியல்:
இந்த வெற்றியுடன் பஞ்சாப் கிங்ஸ் 13 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டிக்கு முன் 5ஆவது இடத்தில் இருந்தது.