சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த மும்பை இந்திஎன்ஸ்க்கு எதிரான போட்டியில் தோனி களமிறங்கியபோது தீபக் சாஹர் அவரை வேடிக்கையாக கிண்டல் செய்தார். இதற்கு தோனி பதிலடி கொடுத்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.
Deepak Chahar sledge MS Dhoni: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 155 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணியின் நூர் அகமது 4 ஓவர்களில் 18 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். கலீல் அகமது 3 விக்கெட் சாய்த்தார்.
24
Deepak Chahar, MS Dhoni, CSK
பின்பு விளையாடிய சிஎஸ்கே 19.1 ஓவரில் 6 விக்கெட் இழந்து 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நூர் அகமது ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த போட்டியில் தோனி எப்போது களமிறங்குவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். சிஎஸ்கேவின் வெற்றிக்கு 8 பந்தில் 4 ரன்கள் இருந்தபோது தோனி உள்ளே களம் புகுந்தார். அப்போது மைதானத்தில் இருந்த சிஎஸ்கே ரசிகர்கள் தோனி.., தோனி என ஆரவாரமிட்டனர். ரசிகர்களின் ஆரவாரத்தால் சென்னை சேப்பாக்கம் மைதானமே குலுங்கியது.
தோனி பேட்டிங் செய்ய வந்தபோது மும்பை இந்தியன்ஸ் வீரர் தீபக் சாஹர் தோனியிடம் ஏதோ கூறினார். தொடர்ந்து அவர் டெஸ்ட்டில் பேட்ஸ்மேன்களுக்கு அருகில் பீல்டர்கள் நிற்பதுபோல் நின்று தோனியை அவமானப்படுத்த முயன்றார். அப்போது தோனி இதற்கு ஏதும் ரியாக்ட் செய்யவில்லை. பின்பு போட்டி முடிந்ததும் தோனி ''என்னையா கிண்டல் செய்கிறாய்'' என்பது போல் தீபக் சாஹரின் பின்னால் பேட்டால் லைட்டாக அடித்தார்.
தீபக் சாஹர் தோனியிடம் சேட்டையை காட்டிய வீடியோவும், தோனி அவரை செல்லமாக பேட்டால் அடிக்கும் வீடியோவும் வைரலாக பரவி வருகிறது. இப்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தாலும் தீப்க் சாஹர் கடந்த சீசன் வரை சிஎஸ்கே அணிக்கு தான் விளையாடினார். அவரும், தோனியும் மிக நெருங்கிய நண்பர்கள். தீபக் சாஹரின் வளர்ச்சியில் தோனியின் பங்கு அளப்பரியது. கடந்த சீசனில் தீபக் சாஹர் காயம் காரணமாக பல போட்டிகளில் விளையாடாததால் சிஎஸ்கே ஏலத்தில் அவரை தக்கவைக்கவில்லை.
44
deepak chahar and dhoni, Cricket News in Tamil
ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை சுமார் ரூ.9 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. சிறந்த ஸ்விங் பவுலரான தீபக் சாஹர் பேட்டிங்கில் கணிசமாக ரன்களும் அடிக்கக்கூடியவர். நேற்றைய போட்டியில் கூட பவுலிங்கில் 1 விக்கெட் வீழ்த்திய தீபக் சாஹர், பேட்டிங்கில் 15 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 28 ரன்கள் விளாசினார். தீபக் சாஹர் சிஎஸ்கே அணிக்காக 68 போட்டிகளில் 71 விக்கெட் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.